குறிச்சொற்கள் விதர்ப்பம்

குறிச்சொல்: விதர்ப்பம்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–74

பகுதி ஏழு : நீர்புகுதல் - 3 மதுராவிலிருந்து மீண்டும் விதர்ப்பத்திற்கே நான் கிளம்பினேன். இம்முறை என்னுடன் மதுராவின் இரண்டு அமைச்சர்களும் உடன்வந்தனர். யமுனையினூடாக படகில் கங்கையை அடைந்து, அங்கிருந்து எதிரோட்டத்தை தாங்கும் சிறிய...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17

16. பசுந்தளிர்ப்புள் விதர்ப்பத்தின் எல்லையை காட்டுப்பாதையினூடாக பாண்டவரும் திரௌபதியும் கடந்துசென்றனர். காட்டு விலங்குகளின் கால்களால் வரையப்பட்டு வேடர்களால் தீட்டப்பட்ட அப்பாதையில் எல்லைக்காவல் என ஏதுமிருக்கவில்லை. ஒருவர் பின் ஒருவரென காலடியோசை சூழ்ந்தொலிக்க உடலெங்கும் விழிக்கூர்மை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14

13. அவைநிற்றல் விதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12

11. இளநாகம் படைத்தலைவன் வஜ்ரகுண்டலனிடம் எல்லைகளை காத்து நிற்கும் பொறுப்பை அளித்து தலைமை அமைச்சர் கருணாகரரிடம் அரசுப்பொறுப்பை ஒப்படைத்தபின் மூன்று சிற்றமைச்சர்களும் சிறுகாவல்படையும் உடன்வர நளன் விதர்ப்பத்திற்கு கிளம்பினான். எல்லை ஊரான சம்பகிரியில் இருந்து...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11

10. படைகொளல் விதர்ப்பத்தின் இளவரசி தமயந்திக்கு மணத்தன்னேற்பு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை பிற மன்னர்கள் அறிவதற்கு முன்னரே நளன் அறிந்தான். அவனிடம் அதை சொன்ன ஒற்றன் “திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு, அரசே. அன்றைய நாள் அந்தி...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10

 9. ஊசலின் தாளம் அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9

8. அன்னங்கள் தமயந்தியின் இயல்புகளை நளனிடம் நாளுக்கொரு செய்தி என சொல்லிக்கொண்டிருந்தனர் ஒற்றர். எளிதில் சினப்பவள், சினந்தமையாலேயே கனிபவள். மாற்றுச்சொல் பொறுக்காதவள். நிகர் வைக்க ஒப்பாதவள். மகளிர்மன்றுகளை வெறுப்பவள். சேடியரன்றி பிற பெண்டிர் அவளுடன்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5

4. கலிமுகம் விடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை....

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4

3. மெய்மைக்கொடி “நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை....

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48

அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி கங்கைத்துறை நோக்கிய சாலையில் தனியாக சென்று கொண்டிருக்கையில் தன் உடல் மெல்ல இறந்து ஊன் பொதியென ஆகி புரவி மேல் படிவதை சிசுபாலன் உணர்ந்தான். கைகால்கள் ஒவ்வொன்றும் உடலிலிருந்து உருகும்...