குறிச்சொற்கள் விஜயம்

குறிச்சொல்: விஜயம்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45

எட்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான துருதர் பாரதவர்ஷத்தில் மலைக்காடுகள் மண்டிய மணிப்பூரக நாட்டிலிருந்து வந்திருந்தார். மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டிருந்த வேத்ரம் என்னும் இசைக்கருவியின் மீது சிறிய கழிகளால் விரைந்து தட்டி...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17

துரியோதனனும் துச்சாதனனும் தொடர கர்ணன் பீஷ்மரின் படுகளத்தை நோக்கி சென்றபோது விழிதுலங்கும் அளவுக்கு காலைஒளி எழுந்துவிட்டிருந்தது. “நமக்கு இனி பொழுதில்லை” என்று துச்சாதனன் மூச்சுவாங்க கர்ணனின் பின் நடந்தபடி சொன்னான். “ஆம், நாம்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12

இருண்ட ஆழங்களில் நிழலுருவாக நெளியும் பல்லாயிரம்கோடி நாகங்களை நான் காண்கிறேன். மண்ணுக்கு மேலும் விண்ணின் அடுக்குகளிலும் செழித்து கிளைவிட்டு நிறைந்துள்ள அனைத்துக்கும் அவையே வேர்கள். அவற்றின் நெளிவுகளே பின்னி மாளிகைகளாகின்றன. சாலைகளும் தெருக்களும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10

காளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9

நீராட்டறையிலிருந்து திரும்புகையில் அங்கநாட்டுப் படைகள் குருக்ஷேத்ரத்தை நோக்கி கிளம்புவதற்கான போர்முரசு மிக அண்மையிலென ஒலிக்கக் கேட்டு கர்ணன் திடுக்கிட்டான். மாளிகைக்கு நேர் கீழே முற்றத்தில் அவ்வோசை எழுவதாகத் தோன்றி அவன் சாளரக்கட்டையைப் பற்றி...