குறிச்சொற்கள் வசிட்டர்

குறிச்சொல்: வசிட்டர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12

அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2

பகுதி ஒன்று : இருள்நகர் - 1 அரசியே, கேள். முதற்பொருளாகிய விஷ்ணுவிலிருந்து படைப்பிறையாகிய பிரம்மனும் பிரம்மனிலிருந்து பிறவித் தொடராக முதற்றாதையர் மரீசியும், கஸ்யபனும், விவஸ்வானும், வைவஸ்வதமனுவும் பிறந்தனர். புவிமன்னர் குலத்தை உருவாக்கிய பிரஜாபதியாகிய...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-30

நான் வசிட்டரின் முதல் மைந்தர் சக்திக்கு அதிருஸ்யந்தி என்னும் மலைமகளில் மைந்தனாகப் பிறந்தவன். விழியறியாது காட்டில் உலவும் கலையறிந்த ஹரிதகர் என்னும் குலத்தில் பிறந்தவள் என் அன்னை. காட்டில் தவமியற்றச் சென்ற என்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-29

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில்,...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35

35. சிம்மத்தின் பாதை நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34

34. கைகள் அறிவது கைகளில் மைந்தனை ஏந்தியபடி அகத்தளத்திற்குச் சென்ற விபுலையும் வித்யுதையும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தனர். உயிரற்றவைபோல ஆகிவிட்டிருந்த தன் கைகளில் இருந்து மைந்தன் நழுவி விழுந்துவிடுவான் என்று வித்யுதை அஞ்சினாள். தங்கள் அறைக்குச்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29

29. பிறிதொருமலர் வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 30

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 4 சூரியனுடன் பேசும் அர்க்கவேள்வியை அஸ்தினபுரியில் நிகழ்த்த தகுதியுள்ளவர் வசிட்டகுருமரபின் தலைவரே என்றனர் வைதிகர். ஆகவே சம்வரணன் நான்குதிசைகளிலும் தூதர்களை அனுப்பி விந்தியமலையின் உச்சியில் வசிட்டர் இருப்பதை அறிந்துகொண்டான். தூதர்களை அனுப்பாமல்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29

பகுதி ஆறு : தீச்சாரல் வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது....