குறிச்சொற்கள் புறப்பாடு II

குறிச்சொல்: புறப்பாடு II

புறப்பாடு, கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு தங்களுக்கு அனுப்பிய கடிதத்தை இன்று உங்கள் தளத்தில் பிரசுரித்து உள்ளீர்கள். அதைக் கண்டவுடன் கட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதையும் தாண்டிய ஒரு பொறுப்புணர்ச்சி...

எம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]

ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சக்கரங்கள் கொண்ட கரிசல்காட்டுக்கிராமம். சென்னைக்கு வராமலேயே மதுரைக்குச் செல்லக்கூடியது. ஏழெட்டு பெட்டிகள் முழுக்கமுழுக்க தென்தமிழகத்தவர்கள். நான் அந்தப்பெட்டியைநோக்கி ஓடியதும் ஒருவன் என் சட்டையைப்பிடித்து ’கியா?’ என்றான். ‘ரயிலு...’ என்றேன். ‘தமிழாளா?’ ‘ஆமா...’ ‘அண்ணாச்சி, அவன் மலையாளத்தான்....

புறப்பாடு II – 18, கூடுதிர்வு

என் அப்பா வீட்டைவிட்டு முதல்முறையாக கிளம்பிச் சென்றபோது அவருக்கு ஒன்பது வயது. பாட்டியை நோக்கி கையை ஓங்கி ‘ச்சீ போடி!’ என்று பல்லைக்கடித்துச் சொல்லிவிட்டு இடுப்பில் ஒற்றைத்துண்டு மட்டும் அணிந்தவராக படியிறங்கி ஓடி...

புறப்பாடு II – 17, பின்நின்றவர்

மதுரையை ரயில் தாண்டியபிறகுதான் நான் விழித்துக்கொண்டேன். அதுவரை எந்த சுயபோதமும் இல்லாமல் தூங்கியிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எச்சில் என் தோளிலும் மடியிலுமாக வழிந்திருந்தது. சன்னலோர இருக்கை என்பதனால் நன்றாகவே சாய்ந்துகொள்ள முடிந்தது....

புறப்பாடு II – 16, ஜோதி

வடலூர் எந்தப்பக்கம் என்று எனக்குத்தெரியாது. நெய்வேலியில் என் பக்கத்து வீட்டுக்காரரின் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பேச்சிலிருந்து அது நெய்வேலி அருகே என்று தெரியும். ஆனால் நெய்வேலி எந்தப்பக்கம் என்று தெரியாது. என்ன...

புறப்பாடு II – 15, நுதல்விழி

சித்ரா அச்சக விலாசத்துக்குச் சென்று என்னைப்பற்றி விசாரித்து கடைசியாக என்னைத்தேடி வந்து பசவராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தார் அருளப்பசாமி. அப்போது நான் கொல்லைப்பக்கமிருந்த பெஞ்சில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். ‘இதோ வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு முன்வாசல்வழியாக வெளியே...

திரைப்பாடல்கள் எழுபதுகள்….

அன்பின் ஜெ , நலந்தானே? 70களின் தமிழ்த்திரைபாடல்களுக்கு ஒரு அஞ்சலி போல் அமைந்த உப்புநீரின் வடிவிலே படித்தேன். எவ்வளவுதான் தமிழ்த்திரைப்படங்களை, அதில் பாடல்கள் இடம் பெறும் அபத்தத்தை கிண்டல் செய்தாலும், தமிழ் திரையிசைப்பாடல்களை விட்டு...

புறப்பாடு II – 14, ரணம்

சென்னையில் அச்சகம் என்பது பெரும்பாலும் பெண்களின் உலகம். அச்சுகோர்க்கும் ஆண்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஆண்கள் கம்பாசிட்டர் வேலைதான் செய்வார்கள். எடைகூடிய அச்சுப்பலகையை எந்திரத்தில் ஏற்றுவதும் இறக்குவதும், மின்சாரம் நின்றுவிட்டால் அவசரத்துக்கு...

புறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்

சந்தியா அச்சகத்தில் சாலையோரமாக ஒரு பெரிய திண்ணை இருந்தது. பழங்கால வீடு அது. சென்னையில் அத்தகைய தெலுங்குமணம் வீசும் வீடுகள் பல இருந்தன. இரண்டுபக்கமும் திண்ணை. நடுவே உள்ள பள்ளம் வழியாக உள்ளே...

புறப்பாடு II – 12, புரம்

மான்வேட்டைக்குச் சென்றிருந்தபோது வழிதவறி பேச்சிப்பாறை உள்காட்டுக்குச் சென்றுவிட்ட தேவநேசன் பெருவட்டரின் கதையை எனக்கு அப்பு அண்ணா சொல்லியிருக்கிறார். புல்மூடிக்கிடந்த பெரும் குழி ஒன்றில் அவர் விழுந்துவிட்டார். இருபதடிக்குமேல் செங்குத்தாக ஆழம் கொண்ட குழி...