குறிச்சொற்கள் பாண்டு

குறிச்சொல்: பாண்டு

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14

இரவுணவுக்குப் பின்னர் கொட்டகையில் வணிகர்களும் வைதிகர்களுமாக நாற்பத்தெட்டுபேர் கூடினர். மென்மழைச்சாரலிருந்தமையால் கதிரொளி முன்மாலையிலேயே மறைந்துவிட்டிருந்தது. ஆனால் நீர்ச்சரடுகள் வழியாக வானொளி மண்மேல் ஊறி இறங்கிக்கொண்டிருந்தது. தேங்கிய நீரின் படலங்கள் ஒளியுடன் கசங்கி அதிர்ந்து...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57

வெண்களர் மண்ணில் கால்கள் புதைய தள்ளாடி தருமன் நடந்தார். விழுந்துவிடுவோம் என்னும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நடந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வும் ஒரே இடத்தில் காற்றில் மிதப்பதாக இன்னொரு தன்னுணர்வும் ஒன்று கலந்து ஓடின....

சுருதை

அன்புள்ள ஜெ, வெண்முரசில், பாரதத்தின் அனைவருக்கும் தெரிந்த சுருக்கமான கதைவடிவில் இல்லாத பாத்திரங்கள் கொள்ளும் விரிவையும், கதையோட்டத்தில் அவற்றின் பங்களிப்பையும் நாம் முதற்கனலிலிருந்தே கண்டு வருகிறோம். அத்தகைய பாத்திரங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம். விதுரனின்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33

பகுதி ஏழு : பூநாகம் - 3 விதுரர் புஷ்பகோஷ்டத்தை அடைந்ததும் விப்ரர் எழுந்து வந்து “அமைச்சரே, அரசர் தங்களை பலமுறை கேட்டுவிட்டார். சினம்கொண்டிருக்கிறார்” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் விதுரர். “அவரிடம் என்ன...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7

பகுதி இரண்டு : சொற்கனல் - 3 முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான். சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான். எழுந்தபோது அது காலைச்சுற்றியது. படுக்கும்போது சால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் மண்ணுலகிலுள்ள அனைத்தும் ஒளியால் உருவம் கொண்டிருக்கின்றன. ஒளியால் அவை பார்க்கப்படுகின்றன. மண்ணுக்குக் கீழே அடியிலா உலகாக விரிந்திருக்கும் ஏழுலகங்களும் இருள் உருவம் கொண்டவற்றால் ஆனவை. அங்கே இருளே...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3

பகுதி ஒன்று : மாமதுரை "விரிகடல் சூழ்ந்த தென்னிலமாளும் நிகரில் கொற்றத்து நிலைபுகழ் செழியனே கேள்! இமயப்பனிமலை முதல் தென்திசை விரிநீர் வெளிவரை பரந்துள்ள பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் நகரமான அஸ்தினபுரியின் கதையைச் சொல்கிறேன்"...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90

பகுதி பதினெட்டு : மழைவேதம் முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89

பகுதி பதினெட்டு : மழைவேதம் மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் "அரசர் எங்கே?" என்றாள். "இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்" என்றாள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88

பகுதி பதினேழு : புதியகாடு இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே...