குறிச்சொற்கள் துருபதர்

குறிச்சொல்: துருபதர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48

ஏவல்மகள் வந்து சிற்றறையின் கதவை தட்டும்போது திரௌபதி துயின்றுகொண்டிருந்தாள். தட்டும் ஒலி கேட்டு அவள் உடல் அதிர்ந்தது. அந்த ஒலி அவளுக்குள் வேறெங்கோ ஒலித்தது. அவள் ஒரு மூடிய கதவை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-75

அம்முறை துரோணரை நேருக்குநேர் எதிர்கொண்ட தருணத்திலேயே துருபதர் உணர்ந்தார், அது தன் இறுதிப் போர் என. ஒவ்வொரு முறை துரோணரை களத்தில் எதிர்க்கையிலும் வஞ்சமும் அதற்கு அப்பாற்பட்ட பேருணர்வொன்றும் எழுந்து அவர் உடலை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73

ஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55

பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-54

ஏகாக்ஷர் சொன்னார்: போரில் ஒவ்வொருவரும் பிறிதொருவராக மாறிக்கொண்டிருப்பதை தொடக்கம் முதலே திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆடைகளை உதிர்த்து, தோல்கழற்றி, ஊன்அகற்றி உள்ளிருந்து எழுபவர்கள்போல தோன்றினர் அனைவரும். ஒவ்வொருநாளும் அறிந்தவர்கள் உடலுக்குள் மாறிக்கொண்டிருந்தனர். இறந்தவர்கள் அனைவரும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40

அஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்தில் ஏகாக்ஷரின் கதை கேட்டு அமர்ந்திருந்த காந்தாரி மெல்லிய சீறல் ஒலியுடன் தலை குனிந்து விழிநீர் பெருக்கினாள். அவள் கண்களைக் கட்டியிருந்த நீலப் பட்டுத் துணியை நனைத்து அவ்விழிநீர் ஊறிப்பரவியது. காந்தாரியின்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31

பாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47

பீலன் அனிலை தலைதாழ்த்தி செருக்கடிப்பதை கேட்டான். அது போருக்கு கிளம்பவிருக்கிறது என்பதை உணர்ந்ததும் திகைப்புடன் இருபுறமும் பார்த்தான். புரவிகள் அனைத்தும் செவிகோட்டி ஒலிக்காக கூர்ந்து நின்றிருந்தன. அனிலை முன்வலக்காலால் மண்ணை கிண்டியது. மீண்டும்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28

யுதிஷ்டிரரின் பாசறையில் வெள்ளிக்கு முன் படைத்தலைவர்கள் மட்டுமே கூடியிருந்த அவையில் வாயில்காவலனாக சுருதகீர்த்தி நின்றிருந்தான். பின்பக்க வாயிலில் சுருதசேனன் நின்றான். பிரதிவிந்தியன் மட்டுமே அவைக்குள் இருந்தான். யுதிஷ்டிரர் வந்து அமர்வதுவரை அவையினர் ஒருவருக்கொருவர்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70

யுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைகையில் உத்தரன் தன் உடல்முழுக்க எடைமிக்க களைப்பை உணர்ந்தான். உள்ளே யுதிஷ்டிரரும் பிறரும்கூட அத்தகைய களைப்புடன் இருப்பதாகத் தோன்றியது. மதுக்களிப்பில் அகம்குழைந்து நாக்குழறி பேசிக்கொண்டிருப்பவர்களின் கூட்டம்போல அங்கிருந்த பேச்சொலிகள் முதற்செவிக்கு...