குறிச்சொற்கள் தீர்க்கன்

குறிச்சொல்: தீர்க்கன்

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43

தீர்க்கனைத் தொடர்ந்து வந்த இரண்டு ஏவலர்கள் மதுக்குடுவைகளையும் வெள்ளிக்கோப்பைகளையும் கொண்டுவந்தனர். அவற்றை தாழ்வான பீடத்தில் வைத்து மதுவை ஊற்றி இருவருக்கும் அளித்தனர். விகர்ணன் பீதர் மதுவை கையிலெடுத்தபோதே குமட்டி உலுக்கிக்கொண்டான். குண்டாசி “தங்களுக்கு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42

குண்டாசி முகவாய் மார்பில் படிந்திருக்க தாழ்வான பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி மஞ்சத்தின் சேக்கைமேல் வைத்திருந்தான். இரு கைகளும் தொங்கி நிலத்தை உரசியபடி கிடந்தன. மெல்லிய காலடிகளுடன் அறைக்குள் வந்த தீர்க்கன் “இளவரசே…”...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40

குடிக்கக் குடிக்க பெருகும் விடாய் கொண்டிருந்தான் குண்டாசி. இரு கைகளாலும் கோப்பையைப்பற்றி உடலை கவிழ்த்து ஒரே மூச்சில் உள்ளிழுத்து விழுங்கினான். “மேலும்! மேலும்!” என்று கூவியபடி அமர்ந்திருந்த பீடத்தை ஓங்கி தட்டினான். தீர்க்கன்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39

விதுரர் எழுந்து சஞ்சயனிடம் “நான் கிளம்புகிறேன். அரசரிடம் விடைபெற்றுவிட்டேன்” என்றபின் யுயுத்ஸுவையும் குண்டாசியையும் பார்த்து தலையசைத்துவிட்டு கிளம்பினார். குண்டாசி “அரசருக்கான அறவுரைகளை முடித்துவிட்டிருப்பீர்கள். தந்தையைப் பழித்த மைந்தனுக்கான அறவுரைகள் கூறலாமே?” என்றான். விதுரர்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35

தீர்க்கன் அரண்மனையின் உள்ளிருந்து மெல்ல வெளிவந்து அனைவரும் சென்றுவிட்டதை உறுதிசெய்த பின் குண்டாசியை நோக்கி ஓடிவந்தான். அவன் தரையோடு தரையாக கிடந்தான். தீர்க்கன் அவனைத் தூக்கி அமரச்செய்தபோது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் கோழையாக எச்சிலும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34

குண்டாசி வழுக்கும் பாறைகளினூடாக கால்வைத்து கைகளை ஊன்றி சிலமுறை சறுக்கியும் பாறைகளில் பற்றி நிலைகொண்டும் மெல்ல எழுந்து நடுவே ஓடிய நீரோடைகளை மிதித்து மறுபக்கம் கடந்தும் சென்றுகொண்டிருந்தான். அப்பால் ஒரு மலைப்பாறையில் பெரிய...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53

52. நிறையாக் கானகம் கீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான்....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46

45. நீர்ப் பசுஞ்சோலை சோலைத்தழைப்புக்கு மேல் எழுந்துநின்ற தேவதாருவின் உச்சிக்கவட்டில் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் மடியில் வில்லையும் இடக்கையருகே அம்புத்தூளியையும் வைத்துக்கொண்டு கஜன் பின்உச்சிவெயில் நிறம் மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் அக்காவல்மாடம் மெல்ல ஆடியது. அவன்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25

24. கரவுக்கானகம் விராடபுரிக்கு வடக்கே மலைச்சரிவில் கோதையை நோக்கி இறங்கும் தப்தை, ஊர்ணை என்னும் இரு காட்டாறுகளுக்கு நடுவே இருந்த செழித்த சிறுகாடு அரசகுடிகளின் வேட்டைக்கும் களியாட்டுக்குமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வேடர்களோ வேட்டையர்களோ நுழைவது...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86

பகுதி பதினேழு : புதியகாடு புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில்...