குறிச்சொற்கள் சுக்ரர்

குறிச்சொல்: சுக்ரர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86

86. சூழ்மண் காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85

85. இறுதி நஞ்சு ஹிரண்யபுரியை அடைய ஒரு நாள் இருக்கையில்தான் யயாதி குருநகரியிலிருந்து கிளம்பி தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை தேவயானி அறிந்தாள். அவன் பெயர் நீண்ட இடைவேளைக்குப்பின் காதில் விழுந்ததும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள்....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77

77. துயரழிமரச்சாயல் அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசுசூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73

73. சொற்றுலா தேவயானியை யயாதி மணந்த நிகழ்வு பாரதவர்ஷம் முழுக்க கதைகளாக பரவிச்சென்றது. ஒவ்வொரு நாளும் மலையடுக்கிலிருந்து எதிரொலி மீள்வதுபோல அக்கதைகளிலொன்று அவனிடமே திரும்பி வந்துகொண்டிருந்தது. “நூறாயிரம் முறை பிறந்து நூறாயிரம் தேவயானிகளை நான்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69

69. எண்ணுவதன் எல்லை யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67

67. வேள்விக்குதிரையின் கால்கள் குருநகரியின் சந்திரகுலத்து அரசன் யயாதி சர்மிஷ்டையை மணங்கொள்ளவிருக்கும் செய்தி ஹிரண்யபுரியை பெருங்களியாட்டு நோக்கி கொண்டுசென்றது. சம்விரதரும் உடன்சென்ற அணிப்படையினரும் மீண்டு வருவதை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும். அரண்மனையிலிருந்து அப்பேச்சு வெளியே செல்வதற்கு...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66

66. கிளையமர்தல் சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64

64. நிழல்வேங்கை முறைமைச் சடங்குகள் முடிந்ததும் தேவயானியை தனியறைக்குச் சென்று ஆடைமாற்றி ஓய்வெடுக்கும்படி முதுசேடி சொன்னாள். அரசியரும் சர்மிஷ்டையும் குடிமூத்தபெண்டிரும் விடைபெற்று கிளம்பினர். தேவயானி  எழுந்ததுமே ஓர் இளம்சேடி குனிந்து அவள் ஆடைகளை மடித்து...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63

63. இணைமலர் சர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள்.  ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா? சொல்லிச்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62

62. புதுப்பொற்கதிர் இருளும் குளிரும் சுற்றியிருந்த காட்டிலிருந்து கிளம்பி குடில்களை சூழ்ந்துகொண்டபோது அடுமனைப்பெண் தேவயானியை நோக்கி “இன்னமும் அப்படியே நின்றிருக்கிறார். அவர் அங்கே நிற்கும்போது இங்கு என்னால் துயில முடியாது. நான் சென்று அழைக்கப்...