குறிச்சொற்கள் சல்யர்

குறிச்சொல்: சல்யர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21

சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20

யுதிஷ்டிரன் அந்தப் போரை தனக்கும் தன் வில்லுக்கும் இடையேயான முரண்பாடாகவே உணர்ந்தார். தயை மிக மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருந்தது. அதன் நாண் இறுகக்கட்டிய யாழின் தந்திபோல் விரலுக்கு வாள்முனையென்றே தன்னை காட்டியது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19

யுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே, விலகுக... அவர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18

சல்யரை அத்தனை வீச்சுடன் களத்தில் ஒருபோதும் அர்ஜுனன் பார்த்ததில்லை. குருக்ஷேத்ரத்தில் பத்து முறைக்கு மேல் அவன் சல்யரை அம்புகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். எத்தகைய வில்லவர் அவர் என்பதை அவன் அறிந்திருந்தான். மலைவில்லவர்களுக்கு உரியமுறையில் நெடுந்தொலைவை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12

சாத்யகி ஒருகணத்தில் மூண்டுவிட்ட அப்போருக்கு மிக அப்பால் நின்றான். இருபுறமிருந்தும் கரிய நீர்ப்பெருக்குகளென படைவீரர்கள் எழுந்து சென்று அறைந்து குழம்பி கலந்து கொப்பளித்து கொந்தளிக்கும் உடற்பரப்பென ஆயினர். எப்பொருளும் எண்ணிக்கை பெருகுகையில் நீரென...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9

துரியோதனன் எழுந்துகொண்டு “நாம் சென்று பிதாமகரை வணங்கி களம்புக வேண்டும். அவ்வாறு வழக்கமில்லை எனினும் இன்று அவ்வாறு செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். கதையை எடுத்துக்கொண்டு “இவ்வாறு நெடும்பொழுது நான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5

அவைக்கூடுகைக்கு வெளியே நிழலசைவென ஏவலன் வந்து விளக்கின் முன் நின்று தலைவணங்கினான். அவன் நிழல் நீண்டு அவைக்கு நடுவே விழ சகுனி தலைதிருப்பி கையசைவால் “என்ன?” என்றார். மத்ரநாட்டின் முத்திரையை அவன் கையால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50

அனல் பெருகிநின்ற குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் விஜயத்தை கையிலேந்தியவனாக அர்ஜுனன்மேல் அம்புடன் எழும்பொருட்டு திரும்பிய கர்ணனிடம் சல்யர் துயரும் ஆற்றாமையுமாக சொன்னார் “மைந்தா, என் சொற்களை கேள். நான் பெரிதும் கற்றறிந்தவன் அல்ல. நான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49

ஒன்பதாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான சார்ங்கர் தன் கையிலிருந்த பித்தளைக் கம்பியை வளைத்துச் செய்ததுபோன்ற சிறிய இசைக்கலனை உதடுகளுடன் பொருத்தி, நாவாலும் உதடாலும் அதை மீட்டி, சிறு தவளைகள் போலவும் வண்டுகள் சேர்ந்து...