குறிச்சொற்கள் கர்ணன்

குறிச்சொல்: கர்ணன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60

பன்னிரண்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான மச்சர் சுரைக்காய்க் குடுவையில் எருதின் குருதிக்குழாயை உலர்த்தி முறுக்கி நரம்பாக்கி இழுத்துக் கட்டி உருவாக்கிய ஒற்றைத்தந்தி யாழில் தன் சுட்டுவிரலை மெல்ல தட்டி விம்மலோசை எழுப்பி அதனுடன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58

ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57

பதினொன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான கும்பகர் பெரிய மண் கலத்தின் வாயில் மெல்லிய ஆட்டுத்தோலை இழுத்துக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த உறுமியின்மீது மென்மையான மூங்கில் கழிகளை மெல்ல உரசி மயில் அகவும் ஒலியையும் நாகணவாய்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56

சிகண்டி தன்னை வெறிகொண்டு எதிர்த்த கிருதவர்மனை விழிதூக்கி நோக்கவில்லை. அப்போர்க்களத்தில் அவர் பீஷ்மரைத் தவிர எவரையுமே நோக்கவில்லை. பீஷ்மரை எதிர்த்துநின்றபோது முதற்கணம் அவருடைய விற்தொழிலும் உடலசைவும் உள்ளம் செல்லும் வழிகளும் முன்னரே நன்கறிந்திருந்தவை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54

அஸ்தினபுரியின் வில்லவர் படையொன்றை தலைமை தாங்கி தேர்த்தட்டில் வில்லுடன் நின்று பாண்டவப் படையை நோக்கிக்கொண்டிருந்தபோது சுபாகு தன்னை அறியாமலேயே விந்தையான ஓர் உளமலர்வை அடைந்தான். சிற்றகவையிலேயே அவன் உள்ளத்தில் இருந்த ஆழ்கனவு அது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50

அனல் பெருகிநின்ற குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் விஜயத்தை கையிலேந்தியவனாக அர்ஜுனன்மேல் அம்புடன் எழும்பொருட்டு திரும்பிய கர்ணனிடம் சல்யர் துயரும் ஆற்றாமையுமாக சொன்னார் “மைந்தா, என் சொற்களை கேள். நான் பெரிதும் கற்றறிந்தவன் அல்ல. நான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49

ஒன்பதாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான சார்ங்கர் தன் கையிலிருந்த பித்தளைக் கம்பியை வளைத்துச் செய்ததுபோன்ற சிறிய இசைக்கலனை உதடுகளுடன் பொருத்தி, நாவாலும் உதடாலும் அதை மீட்டி, சிறு தவளைகள் போலவும் வண்டுகள் சேர்ந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48

படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47

சல்யர் தன்னை மிகையாக காட்டிக்கொள்வதை விருஷசேனன் நோக்கினான். கைகளை வீசி உரத்த குரலில் “யாரங்கே? பின்சகடத்தின் ஆரத்தை இன்னொருமுறை பார்க்கச் சொன்னேனே? அடேய் சம்புகா, நான் வந்தேனென்றால் குதிரைச்சவுக்கு உனக்காகத்தான்” என்று கூவினார்....