Tag Archive: ஹோமர்

ஐரோப்பாவின் கண்களில்…

ஆசிரியருக்கு , சில நாட்களுக்கு முன் ஜர்ரட் டைமெண்டின் “துப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எக்கு” தமிழில் (பாடாவதி மொழிபெயர்ப்பு) முடித்தேன். அதற்கு முன் வில் துரந்தின் The story of Philosophy படித்து முடித்தவுடனும் இதே சந்தேகம் தான் தோன்றியது. Bill Bryson இன் A Short History of Nearly Everything லும் இதே கதை தான். உலகம் தழுவிய வரலாற்று ஆய்வு, மானுடவியல் ஆய்வு, பண்பாட்டு ஆய்வு என வரும்போது இந்தியா ஏன் புறக்கணிக்கப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63744

இலியட்டும் நாமும் 4

[தொடர்ச்சி] அக்கிலிஸ் ஹெக்டரைக் கொல்லுதல்   நாடகத்தருணம் ‘நாடகாந்தம் கவித்வம்’ என்ற ஒரு சொல்லாட்சி உண்டு. நாடகீயத்தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்பராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் உயர்தர நாடகீயத் தருணங்களை. இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன. அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமாதானப்படுத்துவது, நண்பன் கொலைசெய்யப்படும்போது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேசவெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள். ஆனால் கடைசியில் ஹெக்டரைக் கொன்று அந்தச் சடலத்தை அக்கிலிஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17079

இலியட்டும் நாமும் 3

[தொடர்ச்சி] ஹெலென் இலியட்டின் கவித்துவம்   இலியட் காவியத்தை வீரகதைப்பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒருவடிவம் என்று சொல்லலாம். ஆகவே உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. இலியட்டில் முக்கியமான கதையோட்டம் ஏதும் இல்லை. அதன் முதல் வரியே சொல்வதுபோல அது அக்கிலிஸ் என்ற மாவீரனின் ஆண்மை, ஆணவம்,  கட்டுக்கடங்காத சினம் ஆகியவற்றின் விரிவான சித்தரிப்பு மட்டுமே. டிராய் என்ற நகரில் இருந்த இலியம் என்ற கோட்டையில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளே இந்தக்காவியத்தில் சொல்லப்பட்டுள்ளன. அக்கிலிஸ் தீட்டிஸ் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17078

இலியட்டும் நாமும் 2

[தொடர்ச்சி]     பாரீஸும் ஹெலெனும்   இலியட்டின் நாட்டார் அழகியல்     இலியட் காவியத்தின் நாட்டார் அம்சம் எதில் உள்ளது? செறிவை விட அது சரளத்தையே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில்தான். அது நாட்டார் அழகியலின் முக்கியமான அம்சம். அதாவது இது கல்வி கற்ற, காவியப்பயிற்சி உடைய வாசகர்களுக்கானது அல்ல. ஒரு போர்க்களத்தில் போர்முடிந்தபின் இரவில் கணப்பருகே கூடும் வீரர்களிடமோ அல்லது நாட்டுப்புற விழாவிலோ அல்லது அறுவடைக்களத்தில் கூடும் விவசாயிகளிடமோ அல்லது பயணிகள் சத்திரத்திலோ பாடப்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17075

இலியட்டும் நாமும்-1

மகா கவி ஹோமரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலியட் காவியத்தை ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படைகளைத் தீர்மானித்த பெருங்காப்பியங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.  கலைக்களஞ்சியங்களில் பெரும்பாலும் ஹோமரைப்பற்றி அதிகமாக ஏதுமிருப்பதில்லை.  உதாரணமாக மெரியம் வெப்ஸ்டரின் இலக்கியக்கலைக்களஞ்சியம் ஹோமரைப்பறி அனேகமாக ஏதும் தெரியாது , தெரிந்த செய்திகளும் ஊகங்களே என்றுதான் சொல்கிறது. கிரேக்கத்தின்  ஹெலெனிய காலகட்டத்தில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட நான்கு குலங்களில் ஒன்றாகிய அயோனிய குலத்தைச் சேர்ந்தவராக அவர் இருக்கலாம். அவரது தாய்மொழி அயோனியம். கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடடஸ் தனக்கு நானூறுவருடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17073