Tag Archive: ஹொய்ச்சாள கலைவெளியில் -1

ஹொய்ச்சாள கலைவெளியில் – 1

காலையில் ஆறு மணிக்கே கிளம்பவேண்டும் என்பது திட்டம். என் ரயில் ஆறரை மணிக்குத்தான் வந்து சேர்ந்தது. டீ குடிக்காமலேயே குளித்துவிட்டுக் கிளம்பினேன். ஏழுமணிக்கெல்லாம் வேனில் ஏறிவிட்டோம். அந்தியூர் கடந்த பின்னரே பெட்காபி அருந்த முடிந்தது. தாமரைக்கரை வழியாக கொள்ளேகால் சென்று அங்கிருந்து காலை பத்துமணிக்கு சோமநாதபுரா வந்து சேர்ந்தோம். ஹளபேடு பரவலாக அறியப்பட்ட சிற்பக்கோயில்களின் தொகை. பலர் பார்த்திருக்கக் கூடும். ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் உச்சம் என்பது அதுதான். சோமநாதபுராவின் சென்ன கேசவ கோயில் ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் சாதனைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78601