Tag Archive: ஹீரோ

ஹீரோ

ஹீரோவை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான். 2002 ல் நான் தக்கலையில் ஒரு டீக்கடையில் டீக்குடிக்கச் சென்றேன். அருகே ஒரு ‘பெட் ஷாப்’ . அதில் ஒரு கம்பிக்கூண்டுக்குள் கன்னங்கருமையாக பளபளப்பாக ஹீரோ அமர்ந்திருந்தான். ஒரு பழையபாணி பாக்லைட் டெலிபோன் போல. கடையில் எவருமில்லை. ஹீரோ சாலையைப்பார்த்து சலிப்படைந்திருந்தான். என்னைப்பார்த்து ‘தூக்கு என்னை , என்னைத் தூக்கு’ என்று கத்தினான். நான் அருகே சென்று கம்பி இடுக்கு வழியாகக் கைவிட்டு அவனைத் தொட்டேன். கரிக்குவியலில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29242

கடிதங்கள்

தீராக்குழந்தை கவிதை மிக நன்றாக இருந்தது. எத்தனையோ உயிரினங்களைக் கண்டதுண்டு, சில தன் உருவத்தால் பிரமிக்க வைக்கும், பயப்பட வைக்கும், தன் அழகில் லயிக்கவைக்கும், நம்மை நேசிக்கவைக்கும், ஆனால் இந்தத் தீராக்குழந்தை நம்மை புன்னகைக்க வைக்கும், ஒரு நீண்டகால நண்பனைக் கண்டதைப்போல, தன் குழந்தைப்பருவப் புகைப்படத்தைப் பார்த்ததைப்போல், கண்ணாடி முன் நின்று ஆடை அடையாளங்களைத் துறந்த நம் பிம்பத்தைக் காணுதல் போல வெகு நெருக்கமாய் உணர்வது இக்குழந்தைகளிடம் மட்டும்தான். எத்தனை நேரம் பார்த்தாலும் நான் சலிப்படைந்ததேயில்லை. அதன் கண்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30272