Tag Archive: ஹரிசேனர்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 4 அவை புகுந்த கிருஷ்ணன் கைகூப்பியபடி சென்று பீஷ்மரை அணுகி அவரது கால்களில் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். அவன் அருகே வருவதை அறியாதவர் போல அமர்ந்திருந்தவர் அவன் கால்களில் விழுந்ததும் துடித்து எழுந்துகொண்டார். அவரது நீண்ட கைகள் பதறின. “என்ன, என்ன இது?” என்று உதடுகள் அதிர சொல்லி “நான் என்ன வாழ்த்துவது? நீ…” என்றார். “வாழ்த்துங்கள் பிதாமகரே” என்றார் விதுரர். “மண்ணுலகம் உன்னுடையது… அதை பேணுக” என்றார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74378

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 56

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு – 2 ஹரிசேனர் வந்து பீஷ்மரின் தேர் அருகே நின்று தலைவணங்கினார். பீஷ்மர் படைப்பயிற்சிச் சாலையின் விரிந்த முற்றத்தில் இறங்கி அவரை வெறுமனே நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் தன் முதல்மாணவரைப்பார்க்கும் பீஷ்மர் என்ன சொல்வார் என்று சில கணங்களுக்கு முன் தன் உள்ளம் எண்ணியதை உணர்ந்து விதுரர் புன்னகைசெய்தார். பீஷ்மர் அங்கிருந்து எப்போதுமே அகலாதவர்போன்ற பாவனையுடன் படிகளில் ஏறி இடைநாழியில் நடந்து உள்ளே சென்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66859

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12

பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி [ 2 ] காஞ்சி நகர்ப்புறத்தின் கூத்தர் குடில்களுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் மல்லாந்து கிடந்து வானிலூர்ந்த நிலவை நோக்கிக்கொண்டிருந்த இளநாகனின் அருகே மென்மண்ணில் உடல்பதித்து படுத்து கூத்தன் கௌசிக குலத்துக் காரகன் சொன்னான் “கடலில் மீன்கள் போன்றவை இவ்வுலகத்து உண்மைகள் இளம்பாணரே. முடிவற்றவை என்பதனாலேயே அறிதலுக்கப்பாற்பட்டவை. தர்க்கமென்பது நாம் வீசும் வலை. அதில் சிக்கி நம் கைக்கு வரும் மீன்களை நாம் வகைப்படுத்தி அறியமுடியும். உண்டுமகிழமுடியும். அறிந்துவிட்டோமென்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56258