Tag Archive: ஹரன் பிரசன்னா

தொலைதல் பற்றி…

அன்புள்ள ஹரன் கதை வாசித்தேன். சிறப்பாக உள்ளது. அசோகமித்திரனின் உலகைச்சார்ந்த கதை. நேரடியான ,குறைவான சித்தரிப்பு வழியாகச் சொல்லப்படக்கூடியது. மிகையற்ற உணர்ச்சிகள். அதனூடாக ஒரு குடும்பச்சித்திரம். கதையின் மையம் சப்த கன்னிகைகள்தான். தொலைந்துபோனவன் கண்ட கன்னிகைகள் பற்றிய கனவு மெல்லிய புன்னகையுடன் கூடிய ஊகங்களை எழுப்புகிறது. அந்தக்கதைகளை அவன் ஏன் சொல்கிறான், அதற்கான அவனுடைய ‘டெம்ப்ளேட்’ என்ன என்பதுதான் கதையின் சுவாரசியம் இல்லையா? எதைச் சேர்த்திருக்கலாம் என்றால் சிவபாஸ்கரனின் தோற்றத்தைக் கொஞ்சம் விவரித்து கதையில் நிறுவியிருக்கலாம் என்பதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36385

புதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா

சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது. லக்ஷ்மி அக்கா வாங்க வாங்க என்றதையோ, அவ்வா எங்களைப் பார்த்து எப்படி இருக்க என்றதையோ, சிவபாஸ்கரன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்ததையோ என்னால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. லக்ஷ்மி அக்கா எனக்கு தூரத்து சொந்தம். நீண்ட நாள் கழித்து திடீரென்று அவ்வாவையும் லக்ஷ்மி அக்காவையும் பார்க்கலாம் என்று நானும் என் மனைவியும் போயிருந்தோம். லக்ஷ்மி அக்காவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36383

ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா திருநெல்வேலிக்காரர். இப்போது சென்னையில் வசிக்கிறார். கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றுகிறார். இவரது வலைத்தளம் நிழல்கள் இவரதுகதைகளையும் கட்டுரைகளையும் கொண்டது

Permanent link to this article: https://www.jeyamohan.in/36584

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா

ஜெயமோகனின் நாவல்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும் அந்தத் தளத்தில் ஆழ ஆழச்சென்று அது இயங்கும் சூழலின் மனிதர்களை இரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்தும். அவர்களின் வட்டார மொழி நம்மை அவர்களின் உலகத்திற்குள் இட்டுச் செல்லும். தமிழ்நாடு-கேரள எல்லையில் பேசப்படும் தமிழுமல்லாத, மலையாளமுமல்லாத, இரண்டும் கலந்த மொழிதான் ஏழாம் உலகத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரலை ஒப்பிடும்போது ஏழாம் உலகம் எளிதான நடையிலிருக்கிறது. ஜெயமோகனின் ஆறாவது நாவல் இது. பழநியில் குறைப்பிறவிகளைப் பிச்சை எடுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/463

கேள்வி பதில் – 24

திரைப்படங்கள் பார்ப்பதுண்டா? தற்காலத் தமிழ்த்திரைப்படங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? — ஹரன்பிரசன்னா. திரைப்படங்களை நாகர்கோவிலில் தவிர்க்கவே முடியாது. என் குழந்தைகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு வெளியே போவதாக இருந்தால் பெரும்பாலும் திரைப்படத்துக்குத்தான் போயாகவேண்டும். ஆகவே சுமாரான தரத்துக்கு மேல் உள்ள எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவோம். சமீபத்தில் பார்த்தபடங்களில் ஆட்டோகிராஃப் [சேரன்] மிகவும் பிடித்திருந்தது. தமிழின் சிறந்த சில படங்களுள் அது ஒன்று. சென்ற சில வருடங்களில் பார்த்த படங்களில் சொல்லமறந்த கதை, அழகி, மகாநதி, கேளடி கண்மணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74

கேள்வி பதில் – 23

மாந்திரிக யதார்த்தம் [magical realism] என்பது என்ன? தமிழில் மேஜிகல் ரியாலிசத்தை வைத்து எழுதப்பட்ட படைப்புகள் எவை? அவற்றில் சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? மேஜிகல் ரியாலிசத்தை வைத்துக் கதை எழுத முயலும் ஒருவன் கவனத்தில் கொள்ளவேண்டியவை எவை? மேஜிகல் ரியாலிசத்தின் தேவை என்ன? — ஹரன்பிரசன்னா. லத்தீன் அமெரிக்காவில் அவர்களுடைய நாட்டுப்புறக் கதைமரபிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கிய உத்தி மாய யதார்த்தம். பொதுவாக நாட்டுப்புறக் கதைகள் எங்குமே ஒரு அதீத அம்சத்தைக் கொண்டிருக்கும். அதற்கு இரு காரணங்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73