Tag Archive: ஹரன்பிரசன்னா

தொலைதல்- ஹரன்பிரசன்னா-கடிதங்கள்

அன்புள்ள ஜெ நேற்று நண்பரிடம் தொலைபேசியில் நீங்கள் வெளியிட்டுவரும் புதியவர்களின் சிறுகதைகள் வரிசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சரியான அசோகமித்திரன் பாணி கதை ஒன்று வரும் என்று நான் சொன்னேன். ஏன் என்று கேட்டார். அசோகமித்திரன் எழுதவந்த காலகட்டம் முதல் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளில் அவர் தொடர்ச்சியான பாதிப்பை நிகழ்த்திவருகிறார் என்றேன். தலித் இலக்கியம் வந்தபோதுகூட இமையம் அசோகமித்திரன் வழியில்தான் எழுதினார். அசோகமித்திரனிடம் உள்ள ‘மினிமலிசம்’ கவரக்கூடிய விஷயம்.அதோடு ஒரு ‘மெட்டீரியலிஸ்ட் விஸ்டம்’ அது எப்போதும் தமிழ்ச்சமூகத்தில் இருந்துகொண்டிருக்கிறது. நமக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38107/

கேள்வி பதில் – 33, 34

தினம் தினம் புதிதாகக் கவிஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதா? புதிதாதக் கவிதை எழுதுபவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயங்கள் என்ன என்ன? — ஹரன்பிரசன்னா. கண்டிப்பாக ஆரோக்கியமானது. ஒரு இயக்கநிலைச் சமூகத்தில் இலக்கியம் பலவகையிலும் வந்தபடியே இருக்கும். அவற்றில் மிகப்பெரும்பாலானவை சாதாரணமாக இருந்தாலும் அது அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான படைப்பூக்க நிலையைக் காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஏராளமான சாதாரணமான கவிதைகளின் பின்புலத்தில் அவற்றின் சாரத்தை உறிஞ்சிக் கொண்டு, அவை உருவாக்கும் படைப்பாக்கப் பின்புலத்தை சார்ந்துதான் நல்ல ஆக்கங்களும் உச்சகட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/95/

கேள்வி பதில் – 25

நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவதை வரவேற்கிறீர்களா? எழுத்தாளர்கள்தாம் தமிழ்த்திரைப்படத்தை வேறு நல்ல புதிய தளத்திற்குப் பெயர்க்கக்கூடியவர்கள் என்கிற கருத்துச் சொல்லப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா? — ஹரன்பிரசன்னா. திரைப்படம் என்பது இலக்கியமல்ல. அது ஓவியம், புகைப்படம், நாடகம், இசை ஆகிய கலைகளின் கலவையாலான நவீன கலை. அதில் உள்ள நாடக அம்சத்தில் ஒருபகுதியாக இலக்கியம் உள்ளது. ஒரு திரைப்படத்தில் கதைக்கட்டு [Plot], வசனம் என்ற இரு தளங்களில் மட்டுமே இலக்கியம் பங்களிக்கமுடியும். அது எடுத்தாள்கை இலக்கியம் மட்டுமே. அதாவது இலக்கியத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75/

கேள்வி பதில் – 22

தமிழில் சிறுவர் இலக்கியம் திருப்திபடக்கூடிய அளவிற்கு உள்ளதா? — ஹரன்பிரசன்னா. பொதுவாக இம்மாதிரிக் கேள்விகள் கேட்கப்படுகையில் அறிவுஜீவிகள், இல்லை என்ற பதிலை சோகமாகவோ வேகமாகவோ சொல்வதுதான் வழக்கம். அவர்களுக்கு உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட நுட்பமான ஆள் என்ற படிமம் கிடைக்கிறதே. ஆனால், “சரி, இதுவரை வெளிவந்தவற்றைப்பற்றிய ஒரு முழு மதிப்பீட்டை சரியான தகவல்களுடன் கொடு பார்ப்போம்” என்றுகேட்டால் பதில் இருக்காது. நாடகம், திறனாய்வு, கல்வித்துறைஆய்வு எதைப்பற்றியானாலும் இதுதான் நிலை. இங்கே எதையும் கூர்ந்து படிக்க, குறைந்தபட்சம் கவனிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72/

கேள்வி பதில் – 17

தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுள் ஒன்று “ஜெயமோகன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள எல்லா வழிகளிலும் முயலுகிறார்” என்பது. அதாவது self promoting என்கிறார்கள். இந்த விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த விமர்சனத்துக்கு உங்களின் எதிர்வினை என்ன? — ஹரன்பிரசன்னா. இப்படிச் சொல்பவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள் சில உண்டு. தமிழ்நாட்டில் என்னைத்தவிர வேறு எழுத்தாளர்கள் எவருமே தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவில்லையா? அத்தனைப் பேருமே புனிதர்களா? ஆம் என்று சொல்பவர்களிடம் மேற்கொண்டு உரையாட ஏதுமில்லை, தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67/