Tag Archive: ஸ்ரீபத்மன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4

பகுதி ஒன்று : இருள்நகர் – 3 ஆழத்து நிலவறைகளில் இருந்து வெளிவந்த பின்னரும் கனகரின் விழிக்குள் அந்த இருள் இருந்துகொண்டிருந்தது. அவரால் ஒளியை நோக்கி திரும்ப முடியவில்லை. கண்கள் கூச இமைகள் துடித்து மூடிக்கொள்ள விழிநீர் வழிந்தது. அரண்மனையின் இருண்ட மூலைகளை நோக்கியே அவர் நோக்கு திரும்பியது. மூச்சில் நுழைந்த காற்று தெளிந்து மென்மையானதாக இருந்தது. அதுவரை உள்ளே சென்ற காற்று நெஞ்சுக்குள் கொண்டு படியவைத்த இருண்ட விழுக்கு கரைந்து கரைந்து அகல்வதுபோல் ஆறுதல் தோன்றியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125601