Tag Archive: ஸ்ரீதரர்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55

54. பரிஎழுகை சதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரர் எண்ணியதுபோலவே அனைத்தும் முன்சென்றன. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பேரரசி தமயந்தி அஸ்வமேதம் நிகழ்த்தவிருப்பதாக உளவுச் செய்தி வந்தது. நிஷதபுரியின் அவையில் அதைப்பற்றி அவள் பேசியபோது கருணாகரர் மட்டும் தயக்கத்துடன் “இன்றைய சூழலில் பிற அரசர்கள் அதற்கு ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அவர்கள் மோதவேண்டுமென எண்ணினால் நாம் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இல்லை. நம் குலங்கள் பிரிந்துள்ளன. இளையவர் உள்ளமாறுபாடு கொண்டிருக்கிறார்” என்றார். தமயந்தி உறுதியுடன் “ஆம், அதை நான் எண்ணினேன். ஆனால் இப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100514/

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14

13. அவைநிற்றல் விதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதரர். “அது தொன்மையான அரண்மனை அல்லவா?” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன?” என்று அவன் கேட்க நாகசேனர் “அவையெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99044/

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13

12. சகடத்திருமை அந்திப்பொழுதில்தான் அவர்கள் குண்டினபுரியை சென்றடைந்தனர். அதன் புறக்கோட்டை வாயில் இரண்டு ஆள் உயரமே இருந்தது. அடித்தளம் மட்டுமே கற்களால் கட்டப்பட்டு அதன்மேல் மண்ணாலான சுவர் அமைந்திருந்தது. பசுவின் வயிறென வளைந்து நீண்டு சென்ற அச்சுவர் சில இடங்களில் தாவிக் கடக்குமளவே உயரமிருந்தது. அதன்மேல் மழைக்காலத்தில் வளர்ந்த புல் வெயிலில் காய்ந்து இளமஞ்சள் நிறத்தில் காற்றிலாடியது. கோட்டை வாயிலின்மேல் அமைந்த காவல்மாடம் ஈச்சை ஓலையால் கூரையிடப்பட்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்த மரத்தாலான மூன்றடுக்குக் காவல்மாடத்தின் உச்சியில் நடுவே வடுவுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99008/

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12

11. இளநாகம் படைத்தலைவன் வஜ்ரகுண்டலனிடம் எல்லைகளை காத்து நிற்கும் பொறுப்பை அளித்து தலைமை அமைச்சர் கருணாகரரிடம் அரசுப்பொறுப்பை ஒப்படைத்தபின் மூன்று சிற்றமைச்சர்களும் சிறுகாவல்படையும் உடன்வர நளன் விதர்ப்பத்திற்கு கிளம்பினான். எல்லை ஊரான சம்பகிரியில் இருந்து முந்தையநாள் இரவே கிளம்பி வந்து சேர்ந்துகொண்ட புஷ்கரன் உடன் வந்தான். நளன் அழைத்ததுமே மூத்தவனை பார்க்கும் ஆவலுடன் அவன் கிளம்பியிருந்தான். பொறுப்பான அரசுப்பணிகள் எதுவும் அதுவரை அவனுக்கு அளிக்கப்பட்டதில்லை என்பதனால் அதுவும் வெறுமனே உடன் செல்லும் அரசப்பணி என்றே எண்ணியிருந்தான். நகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98980/

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11

10. படைகொளல் விதர்ப்பத்தின் இளவரசி தமயந்திக்கு மணத்தன்னேற்பு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை பிற மன்னர்கள் அறிவதற்கு முன்னரே நளன் அறிந்தான். அவனிடம் அதை சொன்ன ஒற்றன் “திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு, அரசே. அன்றைய நாள் அந்தி வரை அப்படி ஓர் எண்ணமே அரண்மனையில் இருக்கவில்லையென்று உறுதியாக நான் அறிவேன். அந்தி மயங்கியபின் ஏதோ செய்தி வந்திருக்கிறது. முன்னிரவில் அரசரை சென்று பார்த்து ஓலையில் இலச்சினை வாங்கி உச்சிக்குள் ஓலைகளை அனுப்பிவிட்டார்கள். மகதருக்கு அனுப்பப்பட்ட ஓலையைத்தான் நான் பார்க்க முடிந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98957/