Tag Archive: ஸ்தூனகர்ணன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34

துரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள் தான் முதலில் அறியப்பட்டது. பின்னர் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். மறுகணம் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை நோக்கி அருகே நின்றிருப்பவனை அவன் நோக்கினான். பின்னர் இருவரையும் அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். விழிகளைத் திறந்தபோது அவன்முன் ஸ்தூனகர்ணன் நின்றுகொண்டிருப்பதை கண்டான். அவனை விழியிமைக்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124739/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33

காலகம் எப்போதுமே இளமழையில் நனைந்துகொண்டிருக்கும் என்று அஸ்வத்தாமன் அறிந்திருந்தான். இலைகள் சொட்டி இலைகள் அசைந்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழை செறிந்து காலடியில் இருளை தேக்கி வைத்திருந்தன. இருளுக்குள் நீர் சொட்டும் ஒலியில் அக்காடு ஊழ்கநுண்சொல்லை உரைத்தபடி விழிமூடி அமர்ந்திருப்பதுபோலத் தோன்றியது. மூன்று பக்கமும் கரிய பாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப் பசுமைக்குள் ஊறிச்சேர்ந்த நீர் மண்ணில் ஊறி தெளிந்த சிற்றோடைகளாக மாறி சரிந்து இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. நீரோடைகளின் ஓசை காற்று வீசும்போது இடம் மாறி கேட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124658/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32

கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மலைப்பகுதியில் ஏறியதன் களைப்புடன் நின்றனர். கிருதவர்மன் “பாஞ்சாலரே, நீங்கள் வழியை அறிவீர்களா?” என்று கேட்டான். “இல்லை, இவ்வாறு ஓர் இடம் உண்டு என்பதல்லாமல் வேறெதையும் அறிந்ததில்லை. அது இங்கிருக்கும் என்பது என் உள்ளத்தில் தோன்றுவது மட்டுமே” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அந்தக் காட்டின் பெயர் காலகம். சாயாகிருகம் என்னும் இக்காட்டுக்கு அப்பால் உள்ளது. வேடர்கள் இந்தக் காட்டின் எல்லையைக் கடந்து அதற்குள் நுழைவதில்லை. அக்காட்டுக்குள் ஸ்தூனகர்ணன் என்னும் கந்தர்வன் வாழ்கிறான். அவன் அங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124652/

’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79

பகுதி பத்து: நிழல்கவ்வும் ஒளி- 3 புரவி துணிகிழிபடும் ஓசையில் செருக்கடித்ததைக்கேட்டு கர்ணன் விழித்தெழுந்தான். அந்த உளஅசைவில் சற்றே இருக்கை நெகிழ்ந்து மீண்டான். கடிவாளத்தைப் பற்றியபடி விழிதூக்கி நோக்கினான். விண்ணில் ஒரு புள் முரசுத்தோல் வழிக்கப்படும் ஓசையுடன் கடந்துசென்றது. எதிரொலிபோல இன்னொரு பறவை ஓசையிட்டது. அடுத்த கணத்தில் பல்லாயிரம் பறவைக்குரல்கள் எழுந்து காற்றை சூழ்ந்தன. கர்ணன் திரும்பி சூரியனை பார்த்தான். வானில் மிகமெலிதாக செந்நிற வளைகோடு ஒன்று தெரியத்தொடங்கியது. குருதிதொட்ட கிண்ணமொன்றை வைத்து எடுத்ததுபோல. பறவையொலிகள் பெருகியபடியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85287/

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15

பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி [ 5 ] காலகம் என்னும் அடர்வனத்தின் நடுவே இருந்த ஸ்தூனகர்ணனின் பதிட்டையின் மேல் இளமழையும் அருவிச்சிதர்களும் சேர்ந்து பெய்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழைசெறிந்து காலடியில் இருளைத்தேக்கிவைத்திருந்தன. மழைக்காலத்தில் ஓங்கியெழுந்த புதர்ச்செடிகள் இளவேனிற்காற்றில் தங்கள் எடையாலேயே சாய்ந்து நீர்பரவிச்சென்ற பின் எஞ்சியவை போல கிடந்தன. மூன்று பக்கமும் கரியபாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப்பசுமைக்குள் எப்போதும் மழைத்தூறலிருந்தமையால் இலைகள் சொட்டிச் சேர்ந்த மண்ணில் ஊறி தெளிந்த சிற்றோடைகளாக மாறி சரிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56386/

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 36

பகுதி ஏழு : தழல்நீலம் [ 2 ] அடர்காட்டில் தனித்தபிடியானை போல சென்றுகொண்டிருந்த அன்னையை சிகண்டினியும் நிருதனும் தொடர்ந்துசென்றனர். அன்று பகலும் அவ்விரவும் அவள் சென்றுகொண்டே இருந்தாள். காலையொளி காட்டுமீது பரவியபோது நடுவே வட்டமாகக் கிடந்த வெற்றிடமொன்றைச் சென்றடைந்தாள். அடியில் பெரும்பாறை இருந்ததனால் மரங்கள் முளைக்காதிருந்த அந்த நிலத்தில் மண்ணிலிருந்து எழுந்த நீராவியில் விழுந்த இளவெயில் குளமெனத்தேங்கியிருந்தது. அதில் சிறுபூச்சிகள் ஒளியுடன் சுழன்றுகொண்டிருந்தன. செழித்த புற்களின் இலைகளில் இருந்த சிறுசிலந்திவலைகளில் நீர்த்திவலைகள் ஒளிவிட்டன. மெல்லிய சிலந்திவலைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44991/