குறிச்சொற்கள் ஸெபாஸ்டின்
குறிச்சொல்: ஸெபாஸ்டின்
ஸெபாஸ்டின் கவிதைகள்
மறு அடி
சின்ன விஷயத்தைப்
பெரிதாக்கி
அவளை
அடித்தேன்.
கெட்டவார்த்தை சொன்னேன்.
அவள் சாப்பிடவில்லை,
தூங்கவில்லை.
இரவு
இருட்டில்வந்து
பக்கத்தில்படுத்துக்கொண்டு
சொன்னாள்,
''சும்மாதான் என்னை அடித்தீர்கள்
இனிமேல் அடித்தால்
நானும் அடிப்பேன்''
தூக்கத்தில்
ஒரு கனவு கண்டேன்.
ஒற்றையடிப்பாதையில்
நடந்துகொண்டிருக்கிறேன்.
சட்டென்று
பாதை அசைந்தது
அது ஒரு மலைப்பாம்பு!
அவள்
பெரிய ஒரு கம்புடன்
ஓடிவந்து
அதை அடித்துக்கொண்டே இருந்தாள்
சாகும்வரை
உளவியலாளன்
ஆள்கூட்டத்தில்
எத்தனைபேர்
கிறுக்கர்கள் என்றறிய
ஒரு செம்பருத்திப்பூவை
தூக்கிக்காட்டினேன்
சிலர் பார்த்துக்கொண்டு சென்றார்கள்
சிலர் பார்க்கவேயில்லை
ஆள்கூட்டம் சுருங்கியது
தனியனானேன்
மனிதர்களை...