பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் [ 1 ] “பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.” அவர் மென்மரத்தாலான குழைகளை காதிலணிந்திருந்தார். கழுத்தில் செந்நிறக்கற்களாலான மாலை. கன்னங்கரிய நிறம்கொண்டவர். முகத்தில் வெண்விழிகள் …
Tag Archive: ஸஷோர்ணன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/54020
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை [ 2 ] காலையில் சகுனி அறிந்த முதல்செய்தி முதுபெரும் களிறான உபாலனின் இறப்புதான். காலையில் எழுந்தபோது தன் ஆற்றல் முழுக்க ஒழுகிப்போய் கைகால்கள் களைத்திருப்பதையும் கண்கள் எரிவதையும் அவன் அறிந்தான். இரவெல்லாம் கனவுகள் வழியாகவே சென்றுகொண்டிருந்ததையும் நினைவழிந்து உறங்கவே இல்லை என்பதையும் நினைவுகூர்ந்தபடி எழுந்து நின்றபோது தரை படகுபோல ஆடியது. திரும்பவும் அமர்ந்துகொண்டான். அவனுடைய குரல்கேட்டு சேவகன் ஓடிவந்து பணிந்து நின்றான். “மது” என்று சகுனி சொன்னான். சேவகன் கொண்டுவந்த …
Permanent link to this article: https://www.jeyamohan.in/49134
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை [ 1 ] அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான ரதசாலைக்கு இருபக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் இருந்த கரியகற்களாலான சிற்றாலயத்தில் வழிபடப்படாத தெய்வமொன்று கோயில்கொண்டிருந்தது. கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இருவிழிகள் மட்டுமேயான அந்த தெய்வத்தின் பெயர் கலி என்று நிமித்திகர்களும் கணிகர்களும் மட்டுமே அறிந்திருந்தனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடிமாதம் கருநிலவு நாளில் மட்டும் அவர்கள் வந்து அதற்கு சாந்திபூசை செய்து மீள்வார்கள். அப்போதுமட்டும் அதைச்சூழ்ந்திருக்கும் புதர்களையும் கொடிகளையும் வெட்டி வெளியாக்கி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/49090