Tag Archive: ஷோபா சக்தி

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118283/

அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது

  கனடா இலக்கியத்தோட்ட விருது  கண்டிவீரன் என்னும் தொகுதிக்காக ஷோபா சக்திக்கும் அபுனைவு பிரிவில் குறுக்குவெட்டுக்கள் என்னும் தொகுப்புக்காக அசோகமித்திரனுக்கும் வழங்கபட்டுள்ளன ஷோபா சக்தியும் அசோகமித்திரனும் தமிழ் இலக்கிய உலகின் இரு பெரும் படைப்பாளிகள். இருவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்   ஜெ  

Permanent link to this article: https://www.jeyamohan.in/88399/

ஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்

ஜெ, நான் பொதுவாக மனதை உலுக்கும் நூல்களையோ படங்களையோ நெருங்குவதில்லை. ஏழாம் உலகத்தை கையில் எடுத்து 20 பக்கங்கள் தாண்ட முடியாமல் வைத்துவிட்டு 6 மாதங்கள் கழித்தே மீண்டும் நூலை எடுத்தேன். BOX கதை புத்தகம் நாவலின் தொடக்கத்தில் அமையாள் கிழவி குளத்தில் மிதக்கும் காட்சியை வாசிக்கும் போதே என்னால் இதை படிக்க முடியாது என்று தோன்றியது. அதே நேரம் அந்த மொழி என்னை உள்ளே இழுத்தபடியேவும் இருந்தது. இந்த நாவலின் சொல்முறையை, அதன் அழகியலை பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78511/

ஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என ஷோபா சக்தியை நினைக்கிறேன். அவர் நடித்த தீபன் என்ற சினிமா உலகசினிமாவிழாக்களில் முதன்மையான கேன்ஸ் திரைவிழாவில் போட்டிப்பிரிவில் முதற்பரிசு பெற்றிருப்பதை அறிந்து பெருமிதம் அடைந்தேன். ஜாக்யூஸ் அடியார்ட் இயக்கிய இந்த பிரெஞ்சுப்படம் புலம்பெயர்ந்த ஈழ அகதிகள் ஐரோப்பாவில் வாழும் வாழ்க்கையின் சித்திரம் கேன்ஸ் விழாவில் பங்கெடுப்பதென்பதே இந்திய சினிமாக்காரர்களின் கனவு. அங்கே விருதுபெறுவதென்பது ஒருவகையில் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று. ஷோபா சக்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/75486/

ஃபேஸ்புக் இரு லைக்குகள்

ஜெ இந்த விளம்பரத்தை ஃபேஸ்புக்கிலே பார்த்தேன் Panuval – Online Tamil BookStore Price: Rs.500.00 Brand: கண்மணி குணசேகரன் வந்தாரங்குடி”, படையாச்சிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் தேவை பற்றிப் பேசுகிற நாவல். இந்த புத்தகம் தேவைப்பட்டால் +91-8939967179 ,044-43100442என்ற எண்ணுக்கு அழைக்கவும் . ( VPP மற்றும் Door Delivery வசதி உண்டு )   சும்மா ஒரு தகவலுக்காக சரவணன் அன்புள்ள சரவணன், படையாச்சிகள் அதிகம் புத்தகங்களெல்லாம் படிப்பதில்லை. பதிப்பகங்களிடம் விசாரித்தால் தெரியும். ஆகவேதான் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57204/

ஷோபாசக்தி ஒரு கேள்வி

திரு ஜெமோ ஷோபா சக்தியை நேர்மையின் சிகரம் என்றெல்லாம் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். அரசியலில் கடந்த பதினைந்து ஆண்டுக்காலமாக அவர் சோரம்போன கதையெல்லாம் உமக்கு தெரியாது. அதெல்லாம் எங்கள் விஷயம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். தமிழச்சி என்ற ஒரு பெண்மணி ஷோபாவின் பாலியல் அத்துமீறல்களைப்பற்றி ஆதாரபூர்வமாக எழுதியிருந்தார்கள் வாசித்தீர்களா? அதைப்பற்றி நீங்கள் வாயே திறக்கவில்லை. ஒரு சாமியார் அவருக்குப்பிடித்த பெண்ணுடன் படுத்தால் காமிரா வைத்து பிடித்து அவரை கொலைகாரனைப்போல நடத்துகிறீர்கள். ஒரு எழுத்தாலன் அவரிடம் சாட்டில் வலியவந்து வழிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28266/