Tag Archive: ஶ்ரீதமர்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55

பகுதி ஐந்து : தேரோட்டி – 20 அரிஷ்டநேமி தங்கியிருந்த பாறைப்பிளவை நோக்கி செல்லும்போது அர்ஜுனன் தனது காலடியோசை சூழ்ந்திருந்த மலைப்பாறைகளில் பட்டு பெருகி எழுவதை அறிந்தான். பலநூறு உறுதியான காலடிகள் அக்குகைவாயில் நோக்கி சென்று கொண்டிருப்பது போல. அவ்வோசை கேட்டு முட்புதர்களிலிருந்து சிறகடித்தெழுந்த பறவைகள் வானில் சுழன்று படபடத்தன. கீழே பரவியிருந்த கூர்முட்களில் அச்சிறகுகளின் நிழல்கள் படிந்து கிழிபட்டுச் செல்வதை கண்டான். காலையொளியில் அவற்றின் நிழல்கள் சரிந்து நீண்டிருக்க முட்கள் மேலும் கூர்நீட்சி கொண்டிருந்தன. அவனுக்கு வலப்பக்கம் எழுந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80490/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54

பகுதி ஐந்து : தேரோட்டி – 19 இளைய யாதவரும் ஸ்ரீதமரும் அறைவிட்டு அகன்றபின் வாயிலை மூடி மெல்ல அசைந்த திரையை சிலகணங்கள் அர்ஜுனனும் சுபத்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “போர்க்கலை கற்பதில் இளவரசிக்கு ஆர்வம் உண்டா?” என்றான். எத்தனை எளிதாக முற்றிலும் பொருட்டில்லாத ஒன்றை பேசி உரையாடலை தொடங்கமுடிகிறது என வியந்தான். ஆனால் எளிய மனிதர்கள் கூட அதை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். “எனக்கு விற்கலையில் மட்டும் ஆர்வமில்லை” என்றாள் சுபத்திரை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80425/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 5 துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு வெள்ளித்தேர்கள். நூறு வெண்கலப் பேழைகளில் அடுக்கப்பட்ட நீலப்பளிங்குப் புட்டிகளில் யவனர் மட்டுமே வடிக்கத் தெரிந்த நன்மதுத்தேறல். அந்த மதுவளவுக்கே மதிப்புள்ளவை அந்தப்புட்டிகள். நூறு மரப்பேழைகளில் பீதர்நாட்டு பட்டுத்துணிகள். சோனகர்களின் மலர்மணச்சாறு நிரப்பப்பட்டு உருக்கி மூடப்பட்ட பித்தளைச் சிமிழ்கள் கொண்ட பன்னிரு பேழைகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78233/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 89

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 2 கடல் மாளிகை கரையிலிருந்து முந்திரிக்கொடி போல வளைந்து சென்ற பாதையின் மறு எல்லையில் முழுத்த கரிய கனியென எழுந்த பெரும்பாறை மேல் அமைந்திருந்தது. நெடுங்காலம் கடலுக்குள் அலை தழுவ தனித்து நின்றிருந்த ஆழத்து மலை ஒன்றின் கூரிய முகடு அது. அதனருகே இருந்த சிறிய கடற்பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கற்தூண்கள் நாட்டி கற்பாளங்கள் ஏற்றி கட்டப்பட்டிருந்த தேர்ப்பாதை கரையுடன் இணைந்து சுழன்று மேலேறி வந்து அரண்மனையின் பெருமுற்றத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78160/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 84

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 9 கருக்கிருட்டிலேயே தோரணவாயிலைக் கடந்து விழிவெளிச்சமாகத் தெரிந்த பாலைவெளியை நோக்கி நின்றபோது எதற்காக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சுபத்திரை அறிந்திருக்கவில்லை. நீராடிய கூந்தலை ஆற்ற நேரமில்லாததனால் தோளில் விரித்துப் பரப்பியிருந்தாள். விடிகாலைக் கடற்காற்றில் அது எழுந்து மழைக்குப்பின் காகம் என சிறகுதறி ஈரத்தை சிதறடித்துக்கொண்டிருந்தது. பாலையில் கடந்துசெல்லும் காற்று மென்மணலை வருடும் ஒலி கேட்டது. அந்த ஒலியை இருளில் கேட்க அகம் அமைதிகொண்டது. மிகமென்மையான ஒரு வருடல். துயிலும் மகவின் வயிற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77974/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 8 மதுராவின் ஒவ்வொரு செடியையும் சுபத்திரை அறிந்திருந்தாள். ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. அரண்மனையில் தன் மாளிகையில் அவள் இருக்கும் நேரமென்பது இரவில் துயிலும்போது மட்டுமே என்றனர் செவிலியர். இருள் புலரியில் விழித்தெழுந்து படைக்கலப் பயிற்சிக்கு களம் செல்வாள். பின்பு தோளிலேற்றிய அம்பறாத்தூணியுடன் இடக்கையில் வில்லுடன் புரவி மீதேறி குறுங்காட்டுக்குள் அலைவாள். வேட்டையும் கான்விளையாட்டுமென பகல் நிறைப்பாள். இரவெழுந்தபின் படகில் காளிந்தியில் களிப்பாள். நீராடி சொட்டும் உடையுடன் நள்ளிரவில் அரண்மனைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77918/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 82

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 7 கம்சனின் சிறையிலிருந்த பன்னிரண்டு வருடங்கள் வசுதேவர் ரோகிணியை ஒருமுறையேனும் சந்திக்கவில்லை. அவள் வயிற்றில் பிறந்த வெண்ணிற மைந்தன் இளமையிலேயே பெருந்தோள் கொண்டு வளர்வதை சிறையிலிருந்து கேட்டு அகவிழியால் சித்திரம் எழுதிக்கொண்டார். தோள்தொட்டணைத்து உச்சி முகர்ந்து மகிழ்ந்தார். கம்சன் கொல்லப்பட்டு மதுராபுரி விடுதலைபெற்று அவர் சிறைமீண்டு வெளியே வந்தபோது கல்வாயிலில் உடலெங்கும் குருதி வழிய நின்ற இருமைந்தரையும் கண்டு இரு கைகளையும் விரித்தபடி அணுகி மெய்தளர்ந்து அவர்கள் கால்களில் விழுந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77914/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42

பகுதி 9 : பெருவாயில்புரம் – 5 விடியற்காலையில் துவாரகையின் விண்ணளந்தானின் பேராலயத்தில் இருந்து தர்மகண்டம் என்னும் பெருமணியின் ஓசை முழங்கியபோது சாத்யகி ஆடையும் அணிகளும் பூண்டு பயணத்துக்கு சித்தமாகியிருந்தான். பதினெட்டுமுறை தர்மகண்டம் ஓம் ஓம் என்று முழங்கி ஓய்ந்ததும் சிம்மக்குரல்போல துறைமுகப்பின் பெருமுரசம் முழங்கத்தொடங்கியது. தொடர்ந்து அனைத்துக் காவல்கோட்டங்களிலும் முரசுகள் ஒலித்தன. நகரின் மரக்கூட்டங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் கலைந்தெழுந்து காற்றில் சிறகடித்துச் சுழன்று குரலெழுப்பின. வடக்கு எல்லைக்கு அப்பாலிருந்த ஆநிலைகளில் இருந்து பசுக்களின் குரல்கள் எழுந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72790/