Tag Archive: வ.வே.சு.அய்யர்

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்

தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள்.  வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது.   வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21150/

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687/

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22089/

பாரதி விவாதம் – 1- களம்-காலம்

பாரதியின் இலக்கிய இடம் ஜெ. சொல்லியிருக்கும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை.அவற்றை நான் மறுக்கிறேன்.இத்துடன், அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் பாரதியை “வழிச்சிந்தனையாளர்” என்று குறிப்பிட்டது, அவருடன் ஈவேராவையும் இன்னொரு வழிச்சிந்தனையாளர் என்று இணை வைத்தது – இரண்டையும் மறுக்கிறேன். இந்தத் திரியில் பேசுபவர்களில் எத்தனை பேர் பாரதியார் கவிதைள் புத்தகத்தையும், சில உதிரிக் கட்டுரைகளையும் தாண்டி, சீனி.விசுவநாதன் பதிப்பித்த “காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள்” தொகுதிகளைப்பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. (ஜெ, நீங்கள் 1995ல் அந்தமதிப்புரை எழுதும் போது இந்தத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21489/

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதே  நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் உருவாவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி இல்லை. எளிய நேரடிச் சித்தரிப்பை அளிக்கவே திண்டாடக்கூடியவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/169/