Tag Archive: வைரமுத்து

சர்ச்சைகள்

ஜெயமோகனின் இது போன்ற கருத்துகள், அவருக்கு எதிரிகளை உருவாக்குவது இயல்பே. இந்து மதத்தை ஞான மரபு என்று போற்றும் அவரை இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிப்பது இயல்பே. ஜெயமோகனும் சர்சைகளுக்கு சளைத்தவர் அல்ல. கருணாநிதியை இலக்கியவாதி இல்லை என்பது முதல் வைரமுத்து கவிஞரே அல்ல என்பது வரை, அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு, அதற்காக எழும் எதிர்ப்புகளை சமாளிப்பவர். ஒரு பழைய கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/69139

வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்

ஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன.  அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும் ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம் உருவாவதேயில்லை. உண்மையான சொற்கள் என்றால் எப்போதும் ஒரு துல்லியமான ஆளுமைச்சித்திரம் உருவாகி வரும் என்பதையே அளவுகோலாகக் கொள்ள முடியும். ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் இருவகை. ஒன்று அந்த ஆளுமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீவிரமாகவும் நேரடியாகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/594

கேள்வி பதில் – 69

கண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார்? பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா? பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா? நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன்? என்றாலும் இப்பொழுதும் திரைப்பாடல்களில் பாரதியின் பாடல்கள் எந்த இசையமைப்பாளருக்கும் பொருத்தமாகத்தானே அமர்கின்றன? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் பாரதியை திரைப்பாடலாசிரியனாக வைரமுத்துவிடம் ஒப்பிடவில்லை, இசைப்பாடலாசிரியனாகத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123