Tag Archive: வைகை பிரபா

இசை:கடிதங்கள்

வணக்கம். நலமா? மண்ணு வீசும் வாசனையும் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த மூன்று பாடல்களும் தஞ்சாவூர் சின்னப்பொண்ணு பாடியவை. வைகை பிரபா என்பதும் அவரது பெயர்தான் என்றால் மன்னிக்கவும். அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடலை எழுதியவர் கதிரை நீலமேகம் என்ற அறிந்துகொள்ள நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. த.மு.எ.ச. நடத்திய கலை இரவு நிகழ்ச்சியொன்றில் ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகளுக்கும் முன்னால் அப்பாடலை மதுரை சந்திரன் பாடக்கேட்டு கண்கலங்கியது இன்னும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. தினந்தோறும் நான் கேட்கும் இருபது பாடல்களில் அதுவுமொன்றாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9199/

மண்ணு வீசும் வாசனையும்…

கோயில்பட்டி வழியாக பேருந்திசென்றுகொண்டிருந்தேன். சட்டென்று ஒரு குரல் காதில் விழுந்தது. அரைத்தூக்கம். மனம் நெகிழ்ந்த நிலை. அப்பாடல் மனதைக் கலக்கிவிட்டது. தெரிந்த குரல்தான். நாட்டுப்புறப்பாடகி வைகை பிரபா பாடியது. உடனே இறங்கிச்சென்று அந்த ஒலித்தட்டை வாங்கினேன். எந்த குறிப்பும் இல்லாமல் குத்துமதிப்பாக பதிவுசெய்யப்பட்ட பாடல்கள் அவை. வீட்டுக்கு வந்து அவற்றைக் கேட்டேன். தென்பாங்கு அல்லது தெம்மாங்கு பாட்டுக்கு எப்போதுமே ஐந்தாறு மெட்டுக்கள்தான். சோகம், களியாட்டம் இரண்டும் அந்த மெட்டுகளில்தான். பாடுவதன் வேகத்தை மட்டும் மாற்றிக்கொள்வார்கள். பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8977/