Tag Archive: வேஷம்

வேஷம் பற்றி…

அன்புள்ள பிரகாஷ் வேஷம் கதை அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நினைவூட்டினாலும் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் வேறு ஒரு நுட்பமான பிரச்சினையை எதிர்கொள்கிறது. மனிதர்கள் தங்கள் ஆளுமையாகக் கொள்வதற்கு அப்பால் தாங்கள் வேறு என்பதை எப்போதும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆகவேதான் என்றும் வேடம் என்பது ஒரு பெரும் குறியீடாக உலக இலக்கியத்தில் உள்ளது. வேடம் பற்றி எழுதப்பட்ட கதைகளை ஆயிரக்கணக்கில் தொகுக்கமுடியும். வேடம் என்பது இன்னொன்றாக ஆவது. இன்னொன்றை நோக்கிச் செல்வது. தன்னை அழிப்பதும் வெல்வதும் கூட. வேடமுழுமை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36428

வேஷம், உறவு கடிதங்கள்

வேஷம் சிறுகதை குறித்து: பல முடிச்சுகளையும் , யூகங்களையும் விட்டுச் சென்ற நல்ல சிறுகதை. கதையில் சமநிலை கைகூடி வரவில்லை. அதாவது ஆசானின் புலி வேஷம் மீது மக்களுக்கு இருந்த மரியாதைக்கு கதையில் வலு சேர்க்கப்படவில்லை. ஆசானின் வாய்மொழி மூலமாகவோ, அல்லது அவருடைய களியாட்டத்தில் ஏற்படும் மனவோட்டங்கள் மூலமாகவோ அதை இன்னும் விவரித்திருக்கலாம். அதற்கு எதிர்ப்பதமாக வரும் அசல் புலியை குறித்த ஊராரின் பயம் உருவாவது, அதை அவர்கள் சொல்லக் கேட்ட கதைகள் மூலம் வளர்த்தெடுப்பது பின்னர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38477

வேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்

வேஷம் பிரகாஷின் “வேஷம்” சிறுகதைகளுக்கே உரிய செறிவானதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. சூழல் சார்ந்த விவரிப்புகளை ஆசிரியர் கடகடவென சொல்லியபடி தாண்டிப்போவதில்லை என்பதால் கதை நம்முன் அழகாக விரிகிறது. திருவிழா நடக்கும் அந்த வெளியை, அதில் கலந்துகொள்ளும் மக்கள்திரளை, அவர்களது மனநிலையை எல்லாம் தேவைக்கேற்ப நன்றாக விவரித்திருக்கிறார். இந்தக் கதைக்கு பலவிதமான வாசிப்புகள் வரும் என்று நான் ஊகித்தேன். அது போலவே நடந்தது. கடிதம் எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வாசிப்பை முன்வைத்திருக்கிறார்கள். அது இந்தக்கதையின் வெற்றிதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38416

பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்

அன்புள்ள ஜெ., பிரகாஷ் அவர்களின் வேஷம் மாறுதல்களின் காலகட்டத்தை உணர்த்துவதாகத் தோன்றியது.. நிஜத்தை அது தரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் நேரில் கண்ட பின்பு, போல செய்வதின் மதிப்புதான் என்ன..அது எவ்வளவுதான் உண்மைக்கு நெருக்கமாக,புனிதமாக இருந்தாலும் கூட. சில சமயங்களில் நினைப்பதுண்டு ,கட்டுடைப்புகள் நிகழாமல் இருந்தால் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் ரசனையாக இருந்து இருக்ககூடும் என்று.. நல்லவேளை பிரகாஷ் அவர்களின் கருணை புலியையும் ஆசானையும் கொன்று விட்டது…யதார்த்தம் புலியை சர்க்கஸ் வித்தைக்கும், ஆசானை வெறுமையிலும் தள்ளி இருக்குமோ?.. பல்வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38299

புதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்

ஓலையினால் செய்யப்பட்ட சிறு தடுக்கு மறைவுக்குள் இறுக்கிக்கட்டிய கச்சத்துடன், உடலில் பூசப்பட்ட மஞ்சள் வர்ணம் அழியாதபடி இரண்டு கைகளையும் விரித்து கம்புகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு கண்களை மூடி நின்றிருந்தார் ஆசான். தரையில் துலக்கிய பழைய வெண்கலக் கிண்ணங்களில் மஞ்சள், கருப்பு வெள்ளை, சிவப்பு என வண்ணக்குழம்புகள் இருந்தன. ஆசான் உடம்பை விரைப்பாக வைத்து கருங்கல் போல அசையாமல் இருந்தார். சோமனும், கோவிந்தனும் தூரிகையால் வண்ணங்களைத் தொட்டு ஆசானின் உடலில் கோடுகளை எழுதிக்கொண்டிருந்தனர். கருங்கல் மெதுமெதுவாக பாதங்களிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36426