Tag Archive: வேளாண்மை

வேளாண்மை- கடிதங்கள்

ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன். வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே குறிக்கோளைத் தவறவிட்டுப் பன்னாட்டு உரம், பூச்சிமருந்து, விதை கம்பெனிகளின் தரகர்களாக மாறிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ரூ. 4 கோடி பணம் தரப்பட்டதாக தகவல் உண்டு. இந்தப்பணம் அநேகமாகப் பன்னாட்டு நிறுவனத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28860

விவசாயிகள்

 நகைச்சுவை விவசாயிகள் இந்திய அரசியல் சட்டத்தாலும் , இந்திய குற்றநடைமுறைச் சட்டத்தாலும், ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதனால் அது ஒரு தொழில். இதைச் செய்பவர்கள் விவசாயிகள் என்று சொல்லப்படுகிறார்கள். வேறு எந்தத் தொழிலையும் குறிப்பிட முடியாதவர்களையும் விவசாயிகள் என்று சொல்லலாம் என்பது இந்தியக் காவல் துறை மரபு. எனவே இந்திய மக்களில் பெரும்பான்மையினர் விவசாயிகளாவார். விவசாயிகளின் நாட்டின் முதுகெலும்பைப்போன்றவர்கள்.   விவசாயம் செய்பவர்களைப் பல பிரிவுகளாக பிரிப்பது மரபாகும். இவர்களில் இருசாரார் உள்ளனர். விவசாயத்தில் தள்ளப்பட்டவர்கள், விவசாயத்தில் வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3152

வேளாண்மை-கிராமம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, “இந்திய வேளாண்மையின் துயரக் காவியம்” வாசித்தேன். நான் என் பள்ளிப் பருவத்தில் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டேன். பின் கல்லூரிப் படிப்பின் போது, எனக்கும் விவசாயத்திற்கும் சிறு இடைவெளி உண்டானது. வேலையில் சேர்ந்த பின் இடைவெளி மிக அதிகமாயிற்று. நான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவன். இந்த பகுதியில் விவசாயமே பிரதானம். எங்கள் தோட்டத்தில் முன்பெல்லாம் சீமெண்ணெய் பூடு, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றைப் பயன்படுத்துவோம். மஞ்சள், வாழை, நெல், கரும்பு போன்ற அனைத்திற்கும் ஆட்கள் மூலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29085

வாழையும் விஷமும்

இங்கே வாழை என்பது விஷத்திலேயே முளைக்கச்செய்து விஷத்தில் வளார்ந்து விஷத்தில் விளையும் ஒரு விஷகன்னி. உங்கள் கட்டுரையில் இந்த வரி என்னை மிகவும் யோசிக்கவைத்தது. நான் ஆரோக்கியமான உணவு உண்ணும் ஆசையில் வாழைப்பழம் அதிகமாக உண்ணக்கூடியவன். நேந்திரம்பழம், செவ்வாழை போன்றவற்றை உண்கிறேன். நெல்லுக்குத்தான் பூச்சிமருந்து அடிப்பார்கள் என்று கேட்டிருக்கிறேன். வாழைக்குமா பூச்சிமருந்து தெளிக்கிறார்கள்? ராஜாராம் மதுரை அன்புள்ள ராஜாராம் நீங்கள் ஒருமுறை கன்யாகுமரிமாவட்டம் வரவேண்டும். இப்போது நாங்களும் திருச்சியில் முசிறிப்பகுதியும்தான் தமிழகத்தின் வாழைவேளாண்மையின் மையங்கள். நாகர்கோயிலில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28808

வேளாண்மை இருகடிதங்கள்

இயற்கை வேளாண்மை குறித்த ஜெயின் விளக்கத்தை ஒட்டிஇதை பகிர்கிறேன் .நமது விவசாய பிரச்சனைகளுக்கு இதில் நமக்கு தீர்வு கிடைக்கலாம்.இதில் சீரிய ஆய்வுகள் வேளாண் துறை முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது .டாக்டர் .ரங்க பிரசாத் பட் அவரது facebook பக்கத்தில் எழுதியதை இங்கு அளிக்கிறேன் . http://www.facebook.com/note.php?note_id=10150136278520348 அன்புடன் சுனில் அன்புள்ள எழுத்தாளருக்கு! எப்போதும் ஒருங்கிணைந்த முறைகள் விவசாயத்தில் நல்ல பலனை கொடுப்பதுடன் மண் மற்றும் நீர் மாசுபடுதலை தவிர்க்கலாம். தேவையான பரிந்துரைக்கப்பட்ட செயற்கை உறங்களுடன் இயற்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12413

வேளாண்மை ஒரு கடிதம்

திரு ஜெய மோகன். இன்று தங்கள் நண்பர் தண்டபாணியின் கடிதத்துக்கு நீங்கள் போட்ட பதிலில் , பெரு முதலீட்டுடன் கூடிய வேளாண்மை தேவை என்று எழுதியிருந்தீர்கள். முதலில் ‘விவசாயம் ‘ மற்றும் ‘வேளாண்மை’ போன்ற சொற்கள் உழவு முறைக்கு பெருமை சேர்க்கும் சொற்கள். ‘விவசாயம் ‘ என்ற சொல் கீதையில் நான்கு முறை கீதாச்சார்யனால் பிரயோகிக்கப் பட்டது. நான்கு முறையும் அதன் பொருள் ‘தீர்மானம்’ என்றே வருகிறது. பதினெட்டாம் அத்தியாயத்தில் உழவுக்கு ‘க்ரிஷி ‘ என்ற தற்போதைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11631