Tag Archive: வேரில் திகழ்வது [சிறுகதை]

துளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள்

வேரில் திகழ்வது [சிறுகதை] அன்புள்ள ஜெ வேரில் திகழ்வது கதை ஒரு குறுநாவல். ஆனால் அதன் வேகம் காரணமாக அதை வாசித்ததே தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் சிற்றிதழ்களில் கதைகளை வாசிப்பதை மிகவும் குறைத்திருந்தேன். கதைகளில் வாழ்க்கை இருக்கிறது, ஆனால் சுவாரசியம் இல்லை. கதைகள் அப்படியே வாழ்க்கையின் யதார்த்ததைச் சொன்னால்போதாது. அதை கதையாக ஆக்கவேண்டும். ஜானகிராமனின் எல்லாச் சிறுகதைகளும் சுவாரசியமான கதைகள். கதை என்பதற்குள் ஒரு விளையாட்டு உள்ளது. எழுதுபவனும் வாசிப்பவனும் சேர்ந்து ஆடும் ஆட்டம் அது. அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130624/

வானில் அலைகின்றன குரல்கள், வேரில் திகழ்வது -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   வானில் அலைகின்றன குரல்கள் பல நினைவுகளை தூண்டிவிட்டது. ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்ச்சின் அந்த டயல்டோன். என் வாழ்க்கையுடன் முப்பது ஆண்டுகள் அன்றாடம்போலவே கழிந்துவிட்ட ஒன்று. சீரோவை எல்லா எண்ணுடனும் சேர்வது, எவருக்கும் சொந்தமில்லாதது என்று நானும் சொன்னதுண்டு. எல்லாம் ஒரு கனவுபோல சென்றுவிட்டது இல்லையா? தொழில்நுட்பம் ஒன்று வந்தால் முந்தையது அப்படியே மறைந்துவிடுகிறது   வானில் அலையும் ஒலிகளை ஒரு இடத்தில் இழுத்துவைத்து பங்கிடுகிறோம் என்று எனக்கும் தோன்றியது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130491/

வேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்

  வேட்டு [சிறுகதை] அன்புள்ள ஜெ,   வேட்டு கதையை வாசித்தேன். இன்றைக்கு உலகம் முழுக்க இலக்கிய எழுத்தில் ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். திரில்லர், டிடெக்டிவ் எழுத்துக்களின் பாணியில் எழுதப்படும் இலக்கியப்படைப்புக்கள். அவை உருவாவதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமானது முன்புபோல மெட்டிக்குலஸ் டீடெயில்கள் உள்ள ரியலிஸ்டிக் கதைகளை இன்றைக்கு கூர்ந்து வாசிக்க எவருக்கும் பொறுமை இல்லை என்பது. அந்தவகை எழுத்து ஒருவகை பேட்டர்னுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது.  இன்னொன்று இந்தவகையான கதைகளுக்கு மனித மனதுக்குள் ஆராய்ந்து போகவோ அல்லது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130527/

வேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பொலிவதும் கலைவதும் கதையை ஆழ்ந்த மனநிலையுடன் வாசித்தேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையை அது காட்டியது. இன்றைக்கு முப்பது வயதானவர்களில் ஒருசாராருக்கு  அந்த அனுபவம் இருக்கும். மீண்டும் சந்திப்பது மிகமிக துன்பமான ஒன்று. ஆனால் அதை தவிர்க்கமுடிவதும் இல்லை. ஏனென்றால் அதை நாடியே செல்கிறோம். துருப்பிடித்த கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்வது போன்ற அனுபவம் அது. ஆனால் அது ஒரு இன்பமாக நினைவில் மாறிவிடுகிறது. அந்த இன்பத்துக்காக அந்த தருணத்தின் துன்பத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130505/

வேரில்திகழ்வது, துளி -கடிதங்கள்

  வேரில் திகழ்வது [சிறுகதை] அன்புள்ள ஜெ   வேரில்திகழ்வது கதையை ஒரு சினிமாவுக்காக நாம் யோசித்திருக்கிறோம். ஆறாண்டுகளுக்கு முன்பு. நாம் தொடர்பே இல்லை. நான் முயற்சிசெய்துகொண்டுதான் இருக்கிறேன்   இப்போது அதை சிறுகதையாக வாசிக்கையில் இன்னொரு டைமன்ஷன் வருகிறது. அதிலுள்ள கம்பாஷன் என்ற அம்சம். பரிணாமத்தில் கம்பாஷனுக்கு எந்த இடமும் இல்லை என்று குமாரன் மாஸ்டர் சொல்கிறார் [கல்பற்றா நாராயணன்தானே?] ஆனால் அது எப்படியோ உருவாகிவந்துவிட்டது. அதுதான் கதையின் ஆதாரம். அது விலங்குகள் மனிதர்கள் அனைவரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130490/

வேரில் திகழ்வது [சிறுகதை]

பறம்பிக்குளம் காட்டுக்குள் அமைந்த காட்டுக்குடிலுக்கு முன்னால் மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். தாழ்வான மூங்கில் டீபாயில் ஜனிவாக்கர் பிளாக் லேபில், கொத்தி வறுத்த கோழிக்கறி, நிலக்கடலை,முந்திரிப்பருப்பு. நான் நிலக்கடலையை அள்ளித்தின்றபோது ஔசேப்பச்சன் “டேய் அந்த கப்பலண்டியை எடுத்து அப்பால் வை, குடிப்பவனுடன் குடிக்காதவன் வந்துசேர்ந்தால் இதுதான் வினையே. தொடுதீனிகளையெல்லாம் காலிசெய்துவிடுவார்கள்” என்றார். மெய்யாகவே ஸ்ரீதரன் அவற்றை எடுத்து அப்பால் வைத்தான். அவர்களின் பதற்றத்தைக் காண எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ பதுங்குகுழிகளில் போர்ச்சூழலில் ஒளிந்திருப்பதுபோல சாராயமும் தீனியும் போதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130345/