Tag Archive: வேதாந்தம்

மங்காப் புகழ் புத்தர்

வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் தாங்களே முற்றாக வகுத்து முடிவெடுத்துவிடுகின்றன. நாம் செய்வதற்கொன்றுமில்லை. ஆனால் பிறிதொரு தருணத்தில் எனக்கு வரைகலைநாவல்கள் தேவைப்பட்டன. மூளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117100

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42

[ 14 ] பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் தங்கியிருந்த மாளிகை ஸ்நாதக பிராமணர்களுக்குரியது. அவர்கள் காலையிலும் மாலையிலும் பூசனைகள் செய்வதற்குரிய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, அவர்களின் பொழுதிணைவு நீர்வணக்கங்களுக்கு உகந்த முறையில் சிற்றாறு ஒன்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்தது. மகத அரசவையிலிருந்து திரும்பியதுமே இளைய யாதவர் அந்த ஓடைக்கரையில் மரத்தடி நிழலில் சென்று கால் நீட்டி அமர்ந்து கொண்டார். பீமன் அடுமனைக்குச் சென்று அங்குள்ள மடைப்பணியாளர்களிடம் உரையாடத் தொடங்க அர்ஜுனன் அம்மாளிகையின் தனியறைக்குள் சென்று மஞ்சத்தில் கண்மூடி படுத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87565

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software  துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl  Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James  Rollins  ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21252

பகவத் கீதை தேசியப்புனித நூலா?

பகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச்செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப்பண்பாட்டுவெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்றநிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதியஅறிவுகொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே பகவத்கீதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66954

அறிதலை அறியும் அறிவு

நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில் வேதாந்தம் பேசும் கோழைகள் என்று வசைபாடி ஆண்களுக்கு திராணி இல்லாவிட்டால் வெள்ளைக்காரனிடம் பேசி சுதந்திரத்தைப் பெற பெண்கள் போகிறோம் என்றெல்லாம் எள்ளிநகையாடி, நாளிதழை மூஞ்சிமேல் தூக்கி வீசி செல்கிறாள். பாரதி தெரிந்துதான் அங்கே பிரம்மசூத்திரத்தை பேசுவதாக வைத்திருக்கிறார். ஏனென்றால் ‘முட்டவரும் காளையிடம் வேதாந்தம்பேசுவது’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54763

மதமும் தரிசனங்களும்

பெரு மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலை வாசித்து வருகிறேன். சில அடிப்படை சந்தேகங்களுக்கு தங்களின் வாயிலாக விளக்கம் அறிய ஆவலாயுள்ளேன். வேதங்கள், தத்துவங்கள், தரிசனங்கள் போன்றவற்றை தங்கள் நூலிலிருந்து ஓரளவு புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆறு பெரும் மதங்கள் (சைவம், வைணவம் முதலிய) தோன்றியது எவ்விதம் என்று புரியவில்லை. ஆறு தரிசனங்களில் எங்கும் மதங்கள் இருப்பதாக தெரியவில்லை. எனில் மதங்கள் தோன்றியதின் மூலம் என்ன? அதற்கான காலகட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47733

துயரம்

அன்புள்ள ஜெ, மானுட துக்கம் பெரும் துக்கம் அல்லவா? மானுடம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் தவறான அடி எடுத்து வைத்துவிட்டது. அல்லது இந்த துக்கம் எல்லாம் நம்மால் விளைந்ததுதான் என்று என்ன சொன்னாலும் நமது துக்கம் பெரும்துக்கம் அல்லவா ? அறியாமையின் துக்கம், அறியவவே இயலாதவை அளிக்கும் துக்கம். என்னெனவோ ? உதாரணமாக சீதையின் துக்கம். கிறிஸ்து மானுட பாவத்தால் சிலுவை சுமந்து செல்வதில் உள்ள துக்கம். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21309

மாசு

நேற்று மாலைநடை சென்றிருந்தேன். பாறையடியில் மலையடிவாரத்தில் வயல்கள் அந்தியில் மயங்கி விரிந்துகிடக்கும் தனிமையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்கள் இல்லை. மிருகங்கள் இல்லை. வானத்தில் வழுக்கிச்செல்பவை போல சென்றுகொண்டிருந்த தனிப்பறவைகள் மட்டும். அந்தி இருண்டு மரங்கள் வானப்பின்னனியில் சிவப்பாக ஆவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். இயல்பாகவே தேவதேவன் எந்த வார்த்தைகளில் இந்தக் காட்சியைச் சொல்வார் என்ற எண்ணம் ஏற்பட்டது. சந்தேகமே இல்லை தூய்மை. தூய்மை தேவதேவனுக்குப் பிடித்த சொற்களில் ஒன்று. வேறெந்த நல்ல கவிஞரையும்போல அச்சொல்லுக்க்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21424

தூய அத்வைதம்

உங்கள் பல கட்டுரைகளில் தூய அத்வைதம் என்று வருகிறது. அது என்ன? வேதாந்தமா? அல்லது அத்வைதத்திலேயே இரு பிரிவுகள் உள்ளனவா?

Permanent link to this article: https://www.jeyamohan.in/7583