Tag Archive: வேதம்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42

[ 14 ] பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் தங்கியிருந்த மாளிகை ஸ்நாதக பிராமணர்களுக்குரியது. அவர்கள் காலையிலும் மாலையிலும் பூசனைகள் செய்வதற்குரிய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, அவர்களின் பொழுதிணைவு நீர்வணக்கங்களுக்கு உகந்த முறையில் சிற்றாறு ஒன்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்தது. மகத அரசவையிலிருந்து திரும்பியதுமே இளைய யாதவர் அந்த ஓடைக்கரையில் மரத்தடி நிழலில் சென்று கால் நீட்டி அமர்ந்து கொண்டார். பீமன் அடுமனைக்குச் சென்று அங்குள்ள மடைப்பணியாளர்களிடம் உரையாடத் தொடங்க அர்ஜுனன் அம்மாளிகையின் தனியறைக்குள் சென்று மஞ்சத்தில் கண்மூடி படுத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87565

“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, “என்னதான் இருக்கிறது வேதத்தில்?” என்ற சு. கோதண்டராமன் எழுதிய தொடரை வாசித்தேன்.முழுவெண் தலையுடன் நெற்றியில் மூன்று திரு நீற்றுக்குறிகளுடன் அவரின் படம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.படத்தை மட்டும் பார்த்து கட்டுரை எப்படியானதென்று ஊகித்திருந்தால் யாரோ சிவப்பழம் ஒருவர் வேதத்தின் மகிமையை புராணத்தன்மையுடன் நீட்டி முழங்கி இருக்கிறார் என்று கடந்து சென்றிருப்பேன்.ஆனால் “என்னதான் இருக்கிறது வேதத்தில்?” என்ற தலைப்பு ஒரு சவாலை அளிப்பதுபோன்று ஈர்த்தமையால் வாசிக்கத்தொடங்கினேன்.நிறுத்தமுடியாதவாறு உள் இழுத்துக்கொண்டது.நோன்புப் பெருநாள் விடுமுறை என்பதால் ஐம்பத்துநான்கு அலகுகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77123

ஜெயகாந்தனும் வேதமும்

மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை வைத்துப்பார்த்தால் அவர் மிகச்சிறப்பாக உரையாடச்சாத்தியமான கருக்கள் முறையே திருக்குறள், வள்ளலார், தாயுமானவர், சித்தர்பாடல்கள், திருமூலர், பாரதி என்று சொல்வேன். அத்தகைய கருக்களில் மேடையில் அவர் அதிகம் பேச நேரவில்லை. வேதம் என்றால் என்ன என்ற தலைப்பில் ஜெயகாந்தன் ஆற்றிய இந்த உரையில் அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63008

என் குர்-ஆன் வாசிப்பு

‘The absolute is adorable’- Nadaraja Guru. [Wisdom] தக்கலை தர்ஹா ஷெரிஃபில் அடங்கிய பீர் முஹம்மது அப்பா அவர்களைப் பற்றி தமிழில் ஏராளமான அற்புதக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டு இஸ்லாமியக் கலாசாரத்தில் அவர்கள் பங்கு மிக அதிகம். தென் தமிழ்நாட்டில் பீர் முஹம்மது என்ற பேரில் ஏராளமானோர் உள்ளனர். இலக்கிய உலகிலேயே களந்தை பீர் முஹம்மது, சை. பீர் முஹம்மது [மலேசியா], எச். பீர் முஹம்மது [விமரிசகர்], பீர் முஹம்மது [இந்தியா டுடே] எனப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131

வேதம் இந்துஞானத்தின் முதல்நூலா?

  ‘இந்துஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ இந்து சிந்தனை மரபில் உள்ள அவைதிக, நாத்திக,உலகியல்வாத சிந்தனைகளை விரிவாக விளக்கும் நூல்’.  நாத்திக,உலகியல்வாத – சரி. ஆனால் அவைதிக? சாங்கிய யோக நியாய வைசேஷிக தரிசனங்கள் அவைதிகம் அல்ல. அவை சுருதியை ஏற்கின்றன. இந்து சிந்தனை மரபில் எதுவுமே அவைதிகம் என்று கூற முடியாது அல்லவா? நான்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள் சேர்ந்தது தான் இந்து மரபு என்று நீங்களே பலமுறை எழுதியிருக்கிறீர்கள். இதனுடன் ஆசிவக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18196