Tag Archive: வேதங்கள்

அறிதலை அறியும் அறிவு

நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில் வேதாந்தம் பேசும் கோழைகள் என்று வசைபாடி ஆண்களுக்கு திராணி இல்லாவிட்டால் வெள்ளைக்காரனிடம் பேசி சுதந்திரத்தைப் பெற பெண்கள் போகிறோம் என்றெல்லாம் எள்ளிநகையாடி, நாளிதழை மூஞ்சிமேல் தூக்கி வீசி செல்கிறாள். பாரதி தெரிந்துதான் அங்கே பிரம்மசூத்திரத்தை பேசுவதாக வைத்திருக்கிறார். ஏனென்றால் ‘முட்டவரும் காளையிடம் வேதாந்தம்பேசுவது’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54763

இசையும், பிராமணர்களும்

  திரு ஜெயமோகன் உடனடியாக பதில் போட்டமைக்கு நன்றி. நான் ஆதி தமிழ் இசை பிராமணர்களிடம் இருந்ததாகக் கூறுவது பரிபாடல் மூலம்தான். அதுவே நமக்குக் கிடைத்த முதல் இசைக் குறிப்புகள் உள்ள நூல். அதில் காணப்படும் பல புலவர்கள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். மேலும் அவை சுட்டும் விஷயங்கள் வைதீக புராண விஷயங்கள். நீங்கள் அந்த நாளில் தாழ்ந்ததாகக் கருதுவது பாணர் மரபை என நினைக்கிறேன். அது அவர்களின் பல முனை வாழ்க்கையின் ஒரு அங்கம். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36363

பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன். தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கிப் போட்டுப் புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை. சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மதப் பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35680

வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?

நான்மறை சொல்லினும் மெய்தனை அறி? என்ற தலைப்பில் சிறகு இதழில் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். வேதங்களைப்பற்றிய ஒரு கறாரான கட்டுரை. வேதங்களைப்பற்றி நம்மிடையே எழுதப்படும் சாதக பாதக விமர்சனங்களில் பெரும்பகுதி வேதங்களைப்பற்றிய பிரமைகளில் இருந்து எழக்கூடியவை. வேதங்களில் இல்லாதது இல்லை, உலக ஞானத்துக்கே அவைதான் அடிப்படை, அவை மாபெரும் தத்துவக் களஞ்சியங்கள் என்றவகையிலே ஒரு தரப்பு எழுதிக்கொண்டிருக்கும். அதற்கு மாறாக வேதங்கள் சாதியவெறுப்பை உருவாக்கும் பார்ப்பனியக்குப்பைகள் என்ற கருத்து சொல்லப்படும் தமிழில் வேதங்கள் கிடைக்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27410

கேள்வி பதில் – 51, 52

வேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும்? — பி.கே.சிவகுமார். வேதங்களை நான் படித்தது மலையாள மொழிபெயர்ப்புகளில். மலையாள மொழி மேற்கட்டுமானத்தில் சம்ஸ்கிருதமேதான். ஆகவே மொழிபெயர்ப்பு மிக உண்மையானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கும். மேலும் மொழிபெயர்ப்புகளைக் கேரள தேசியப் பெருங்கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் செய்திருக்கிறார். வேதங்கள் குறித்த அரிய ஆய்வுகளும் மலையாளத்தில் உள்ளன. வேதங்களைப் பற்றி படிக்க ஆரம்பிக்கையில் ஓர் அடிப்படைத்தெளிவு தேவை. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112