Tag Archive: வெ.நாராயணன்

இலக்கியவட்டம் நாராயணன்

மதிப்பிற்குரிய ஜெ.மோ. அவர்களுக்கு, வணக்கம். எனது வலைப்பூவில் அமரர். வெ.நாராயணன் அவர்களைப் பற்றிய ஒரு நினைவேந்தல் கட்டுரையை எழுதியுள்ளேன். அவருடன் பணியாற்றியவன், இலக்கிய வட்ட கூட்டங்களில் பங்கேற்றவன் என்ற முறையில் எனது அவதானிப்பைப் பதிவு செய்துள்ளேன். அதைத் தங்களது பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா. நன்றி. இப்படிக்கு, தங்களது வாசகன், தி.ஸ்ரீ. நாராயணன் ஒரு நினைவு நாராயணன்- கடிதம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/26319

வெ.நாராயணன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, காஞ்சீபுரம் நாராயணன் என்ற கெத்தேல் சாகிபைப்பற்றி வாசித்தேன். கெத்தேல் சாகிப்பை வாசிக்கும்போது இந்தமாதிரி மனிதர்கள் எல்லாம் பழையகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப்பிறகு நீங்கள் வெளியிட்ட கடிதங்கள் வழியாக தெரியவந்த மனிதர்கள் என்னை கூச்சப்பட வைத்துவிட்டார்கள். மனிதனை அறம் வழிநடத்தமுடியும் என்பதை நம்பமுடியாதவனாக என்னை இந்த வாழ்க்கை மாற்றிவிட்டதே என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த மனநிலை எனக்கு இருக்கும்போது நான் உண்மையிலேயே அத்தகைய மனிதர்களைச் சந்தித்தால்கூட அவர்களை நம்பியிருக்கமாட்டேன். ஏதோ லாபநோக்கத்துட்ன் அதைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12543

வெ.நாராயணன் -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, சோற்றுக் கணக்கை படித்தபின் எனக்கு காஞ்சிபுரம் – இலக்கியவட்டம் நாராயணன் தான் ஞாபகத்திற்கு வந்தார். எனக்குத் தெரிந்த ‘கெத்தேல் சாகிப்’ அவர்தான். அவர் நடத்திய இலக்கிய வட்டக் கூட்டங்களில் புத்தக விற்பனையும் உண்டு. நவீன இலக்கிய பதிப்பகங்கள் பலவற்றிலிருந்து 25% சதவிகித தள்ளுபடி விலைக்குப் புத்தகங்கள் வாங்கி அதே 25% தள்ளுபடியில் வாசகர்களுக்குக் கொடுப்பார். அதுவும் கடனுக்கு. எல்லாக் கூட்டங்களிலும் புத்தகங்கள் மூன்று, நான்கு பெஞ்சுகளில் கண்காட்சியாக வைக்கபட்டிருக்கும. கூட்டத்திற்கு வரும் யார் வேண்டுமென்றாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12209