Tag Archive: வெள்ளை யானை

கடிதங்கள்

அன்புள்ள அய்யா ! நான் தங்களின் வாசகனாவேன், தற்பொழுது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். தங்களின் சமீபத்திய வருகையின் போது தங்களை சந்திக்க வாய்ப்பு அமையாமல் போய்விட்டது  பணிச்சூழலின் காரணமாக. தங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாக உள்ளது. ஆனால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை அதனை ஒத்திப் போட்டே வந்திருக்கின்றது. இருப்பினும் கடந்த 8 வருடங்களாக எழுத நினைத்த ஒரு அறிமுகக் கடிதத்தை எழுதிவிட்ட ஒரு திருப்தி உண்டாகிறது.  இது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81975

கொல்லும் வெள்ளை யானை

யானையைப் பற்றி எழுதினாலும் சரி, யானையை ஒரு உருவகமாக எழுதினாலும் சரி, ஜெயமோகன் சிலிர்க்க வைத்து விடுகிறார். அயல் நாட்டின் ஏதோ ஓர் ஏரியில் உறைந்து கிடந்த பிரம்மாண்டப் பனி மிருகத்தைத் தூக்க மருந்துகள் கொடுத்துப் பெயர்த்து எடுத்து, உறக்கத்திலேயே அதை ஓர் வெப்ப நாட்டுக்குக் கொண்டு வந்து வியர்வையில் உருகச் செய்து வெறியேற்றி விட்டால் கண்மண் தெரியாமல் கொல்லத்தானே செய்யும். ஐஸ் ஹவுஸிற்கு வந்திறங்கி இருக்கும் பனிக்கட்டியை முதல் முறை விவரித்து அதை ஒரு மதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57429

வெள்ளையானை – ஒரு விமர்சனம்

ஆளும்வர்க்கத்தின் வாழ்வே பெரும்பாலும் வரலாறாக பதியப்படும் வேளையில் அடித்தட்டு மக்களின் பிளிறலாக வெள்ளையானை வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை, விஷ்ணுபுரம், காடு நாவல்களை வாசித்திருக்கிறேன். இம்மூன்றும் தமிழின் மிக முக்கியமான நாவல்கள். அந்த வரிசையில் இப்போது வெள்ளையானையும் சேர்ந்துவிட்டது. சித்திரவீதிக்காரன் விமர்சனக்கட்டுரை அவரது இணையதளத்தில்

Permanent link to this article: https://www.jeyamohan.in/54479

நாளைய உலகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நேற்று உங்களை வெள்ளை யானை வெளியீட்டு விழாவில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி ..விழா மிக சிறப்பாக இருந்தது .. நான் முதல் முறை இப்படி பட்ட விழாவிற்கு வருகின்றேன் .. யாரையும் முன்பே அறிமுகம் இல்லாத கூட்டங்களுக்கு செல்ல ஒரு தயக்கம் … நண்பர் தங்கவேல் வருவார் என அறிந்ததால் வந்து விட்டேன் .. வருமுன் இப்படிப்பட்ட விழாக்களில் , பொதுவாக பேச்சாளர்கள் விழாவுக்கான தலைப்பை விட்டு சம்பந்தம் இல்லாத பேச்சுக்களை பேசுவார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42955

இருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…

ஆசிரியருக்கு வணக்கம். அலெக்சின் எழுத்து பிரசுரமே உங்கள் புத்தகத்தைப் பதிப்பித்தது. உங்கள் அனுமதி இல்லாமல் செய்து இருக்காது என நினைக்கிறேன். தான் பதிப்பித்த நூலை ஒருவர் புரோமோட் செய்வதில் என்ன தவறு? அலெக்ஸை பதிப்பாளர் என சொல்லாமல் கிறித்துவ இறையியலாளர் என குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? இது வரை பல முறை அலெக்ஸைப் பற்றி எழுதியுள்ளிர்கள், நூறு நாற்காலிகள் மலிவு பதிப்பு பற்றி குறிப்பிடும் போதும் அலெக்ஸை பற்றி சொல்லியுள்ளீர்கள். அப்போதெல்லாம் கிறித்துவ இறையிலாளர் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43047

தடுமாறும் அறம்: வெள்ளை யானை

ஜெயமோகனின் பல படைப்புகளில் நான் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சமநிலை உண்டு. பின் தொடரும் நிழலின் குரல் நாவல் மார்க்சிய சர்வாதிகாரத்தை, வன்முறையை தோலுரித்து அதே சமயம் அதன் மெய்யியலுக்கு இடம் கொடுக்கிறது. காடு நாவலில் மலையில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பணிகள் சொல்லப் பட்டு, அதைக் கேள்வி கேட்கும் ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த நாவல், அவ்வாறு இல்லாமல் முழுவதும் ஒரு பக்கச் சாய்வாக உள்ளது என்று கருத இடமிருக்கிறது. சமநிலையான பார்வை நாவலின் தீவிர உணர்ச்சிகளைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42289

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

எழுத்து பிரசுர வெளியீடாக வந்திருக்கும் ஜெயமோகனின் புதிய நாவல் வெள்ளையானை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது. சொல்வனம் விமர்சனக்கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/41488