Tag Archive: வெள்ளையானை- கடிதம்

வெள்ளையானை- இலக்கணம்

அன்புள்ள ஜெயமோகன் வெள்ளையானை என்ற நூல் நாவலின் தலைப்பில் வெள்ளை யானை என்று நடுவில் இடைவெளி விடப்பட்டிருக்கவேண்டும், இது இலக்கணத்தவறு என்று ஒரு நண்பன் சொன்னான். நீங்கள் அந்தத் தலைப்பை எப்படி அனுமதித்தீர்கள்? சாந்தகுமார் சாந்தகுமார், யார் அந்த மடையன்? அவனையெல்லாம் திருவிளையாடல்புராணத்தை ஒருமுறை முழுக்க வாசிக்கச் சொல்லவேண்டும், அப்போதுதான் அடங்குவான். தமிழில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களை விட இலக்கணமேதைகள் அதிகமாகிவிட்டனர் . அரசு கொசுமருந்து மாதிரி ஏதாவது புகை கண்டுபிடித்து அடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஜெ அன்புள்ள ஜெயமோகன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42979

வெள்ளையானை- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலம். உங்கள் புதிய நாவல் வெள்ளை யானை கிடைத்தது. நண்பர் வே.. அலெக்ஸ் அனுப்பி தந்திருந்தார். இரண்டு அமர்வுகளாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். தங்கள் அறம் தொகுப்புக்குப் பிறகு வாசிப்பின் பேரனுபவத்தைத் தந்த நாவல் அது. கவிதையுணர்வும் மனிதநேயமும் தீமைக்கெதிராகப் பொங்கியெழும் போர்க்குணமும் இரக்கமும் கருணையும் கொண்ட அயர்லாந்துக்காரனான எய்டன் என்னும் ராணுவ அதிகாரியின் பார்வையில் விரிகிறது, மறைக்கப்பட்ட சென்னையின் வரலாறு. அவனது மனவோட்டத்தைச் சார்ந்து நாவலின் சித்திரமும் தீட்டப்பட்டுள்ளது. மதராசப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41663