Tag Archive: வெற்றித்திருநகர்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 20

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 5 ] தானிட்ட முட்டைகளை அணைத்துச்சுருண்டிருக்கும் நீலநாகம் போல கிருஷ்ணை நான்கு குன்றுகளைச் சுற்றிக்கொண்டு சென்றதை மலைமேலிருந்து பார்க்க முடிந்தது. அந்தக் குன்றுகளுக்கு மேல் காவல்மாடங்களில் கொடிகள் பறந்தன. “இந்த நான்கு மலைகளால்தான் இந்நிலம் நால்கொண்டா என்று அழைக்கப்படுகிறது” என்றார் கீகடர். மலைச்சரிவில் இறங்குவதற்கு முன்பு அங்கே பாறையிடுக்கிலிருந்து ஊறிவழிந்த குளிர்ந்த நீரை அருந்தியபின் பாறைமேல் அமர்ந்து மலைகளில் பறித்துவந்த காய்களை உண்டுகொண்டிருந்தார்கள். “இந்நிலம் மிகமிகத் தொன்மையானது. முற்காலத்தில் இங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56581

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 4 ] மண்ணுலகிலுள்ள அனைத்தும் ஒளியால் உருவம் கொண்டிருக்கின்றன. ஒளியால் அவை பார்க்கப்படுகின்றன. மண்ணுக்குக் கீழே அடியிலா உலகாக விரிந்திருக்கும் ஏழுலகங்களும் இருள் உருவம் கொண்டவற்றால் ஆனவை. அங்கே இருளே பார்வையை அளிக்கிறது. மண்ணுக்கடியிலிருக்கும் முதல் உலகம் அதலம். அங்கே வானமென மண்ணும் காலடியில் விண்ணும் உள்ளன. இருண்ட சிறகுகளுடன் பறந்தலையும் பாதாளமூர்த்திகளின் உலகம் அது. கோடானுகோடி நோய்களாக அவையே உயிர்க்குலங்கள் மேல் படர்ந்தேறுகின்றன. இருளேயாகி விரிந்த வானுக்கு அப்பால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56516

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 3 ] பெருநீர்கங்கையில் பயஸ்வினி, மிதவாஹினி, யாமினி என்னும் மூன்று காட்டாறுகள் கலக்குமிடத்தில் இருந்தது பிரமாணகோடி என்னும் முனம்பு. காட்டாறுகளில் மழைக்கால வெள்ளம் வந்தபோது எழுந்துபடிந்த சேற்றுக்குவைகள் காலப்போக்கில் இறுகி நிலமாகி உருவான அதன் பெரும்பகுதியில் மென்சதுப்புப் பரப்புகள்மேல் நீலப்பச்சைநிறமான கோரையும் வெண்ணிறப்பூக்குச்சங்கள் எழுந்து காற்றிலாடும் நாணலும் நிறைந்திருந்தன. மையத்தில் நீர்மருதுகளும் ஆயாமரங்களும் ஒதியமரங்களும் செறிந்த சோலை அகன்ற இலைகளினாலான ஒளிபுகாத தழைக்கூரையுடன் நின்றது. அரசகுலத்தவரின் வேட்டைப்பயிற்சிக்கும் நீர்விளையாடலுக்குமாக ஒதுக்கப்பட்டிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56496

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 17

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 2 ] துச்சாதனன் நன்கறிந்தவை அண்ணனின் பாதங்கள். அவனுக்கு மொழி அறியவந்த இளமையில் அவன் அன்னை அவற்றைச்சுட்டிக்காட்டிச் சொன்னாள் “தமையன்”. அவன் தான் என்ற சொல்லுக்கு முன்னரே அதைக் கற்றுக்கொண்டான். தந்தையை அடையாளம் காண்பதற்கு முன்னரே தமையனை அறிந்துகொண்டான். தமையனின் பாதங்களைப் பின்தொடர்ந்து சென்று அவன் நடைபழகினான். துரியோதனனின் பேச்சும் பாவனைகளும் அவனில் நிழலுரு என பிரதிபலித்தன. துரியோதனனின் இரண்டு கனத்த புயங்களையும் துச்சாதனன் விரும்பினான். மலைப்பாம்புகள் என பேராற்றலுக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56484

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 1 ] இருள்வேழங்கள் என எழுந்து நின்ற மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காட்டுக்கு காளஹஸ்தி என்று பெயர். அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சின்னஞ்சிறிய சிவக்குறியை வழிபட சித்தம் பாதமாகி அலைந்துதிரியும் இடநெறிச் சிவப்படிவர்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை இரந்துண்டு, மயானங்களில் தங்கி, இல்லறத்தோர் மெய்தீண்டாது, சிவமன்றி சொல்லறியாது சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுக்க நூற்றெட்டு மறைத்தலங்கள் இருந்தன. தென்னகத்தில் அண்ணாமலைக்குச் சென்றபின் அவர்கள் காஞ்சிக்குள் நுழையாமல் காளஹஸ்திக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56448