Tag Archive: வெண்முரசு

நீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு

சென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு முன் நிகழும் கொடியேற்ற நிகழ்வில் கே.கே.எம்-மை கொடியேற்றச் சொல்வார்கள். ஏற்றுவார். பேசக் கூறுவார்கள். அவர் புரியாமல் ‘’என்ன பேச’’ என்பார். ‘’கொடியேத்தியிருக்கீங்க தோழர். பேசுங்க’’ என்பார்கள். ‘’பன்னிமலை எஸ்டேட்-னு ஒரு இடம்’’ என்று தொடங்குவார் கே.கே.எம். அந்தப் பகுதியை கிட்டத்தட்ட வரிவரியாக மனப்பாடமாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117766/

செந்நா வேங்கை

வெண்முரசு நாவல்வரிசையின் பதினெட்டாவது நாவல் செந்நா வேங்கை. யானை மத்தகத்தைப் பிளந்து குருதி உண்டு முகவாய் நக்கிப் படுத்திருக்கும் அன்னை வேங்கை குருக்ஷேத்திரப் போர்நிலம்தான். அங்கே அறமும் மெய்ஞானமும் வென்றிருக்கலாம். ஆனால் எல்லாப் போர்க்களங்களும் அடிப்படையில் கொலைவெளிகள் மட்டுமே.   இதை தொடங்குவதற்காக சிலநாட்களாகவே ஊரில் இல்லாமல் அலைந்துகொண்டிருக்கிறேன். இன்று தொடங்கிவிட்டேன். சில பகுதிகளாவது முன்னால் சென்றால் நன்று.   ஜூன்மாதம் ஒன்றாம் தேதி முதல் வெளிவரும்.   ஜெ   வெண்முரசுவிவாதங்கள்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/109496/

வெண்முரசு ஒரு கடிதம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தினமும் வலைதளத்தில் தினமணி நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துடன் உங்கள் வலைதள பதிவுகளையும் பின்தொடரும் பழக்கம் கைகூடிவிட்டது. உங்கள் தின பதிவுகளை பின்தொடருவதை வழக்கமாக்கி  கொண்ட நாள் முதல் “வெண்முரசு” நாவல் தொடரின் பக்கங்களை மட்டும் படிக்காமல் விட்டுவிடுவேன். நாவலை இடையிலிருந்து படிக்க மனம் வரவில்லை, முதல் பாகம் ‘முதற்கன’ லில் இருந்து படித்து பின்தொடர விருப்பபட்டு படிக்காமலேயே இருந்தேன். அதனால் இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன் போன்ற நாவல்கள் என்கன்முன்னே படிக்காமல் விடப்பட்டன. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86472/

புதுயுக நாவல்

  ஜெ பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்து இப்போதுதான் முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்கும்போது மெல்லிதாக தோன்றியது. பின்பு வெண்முரசு நாவல்தொடர் வாசிக்கும்போதும் தோன்றியது. [கொற்றவை இன்னும் வாசிக்கவில்லை] இந்நாவல்கள் எல்லாமே சிதறிக்கிடக்கின்றன. ஒரு மையத்தொடர்ச்சியை நாமேதான் கொஞ்சம் கஷ்டப்பட்டு உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விஷ்ணுபுரமும் வெண்முரசுநாவல்களும் அவற்றின் மைத்தாலஜிக்கல் பின்னணி காரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலைக் கையாள்வதனால் அது ஒரு ஒருமையை உருவாக்குவதுபோலத் தோன்றுகிறது, உண்மையில் அப்படி இல்லை. சொல்லப்போனால் உங்கள் நாவலின் ஒரு பகுதி இன்னொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85653/

‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்

வெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவலாக காண்டீபம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். செப்டெம்பர் 15 அன்று வெளிவரத்தொடங்கும். அதன் கதைமையம் அர்ஜுனன். அவனுடைய பயணங்கள். எவ்வகை நாவலாக இருக்கும் என இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் குழந்தைத்தன்மை கொண்ட மிகைகற்பனைகள் நிறைந்த ஒரு நாவலாக அமையவேண்டுமென விரும்புகிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/78237/

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77875/

சலசலப்புகளுக்கு அப்பால்…

ஜெ சலசலப்புகளில் நான் வேண்டுமென்றே தான் கடுமையாக எதிர்வினை வைத்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே இந்த ‘அல்லக்கை, அடிவருடி’ கோஷங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் இதுவரை சீண்டியதில்லை. ஆனால் அவ்வப்போது எரிச்சலை உண்டாக்கியது என்பதென்னவோ உண்மைதான். இப்போது இந்த கோஷம் வரைமுறையின்றி செல்கிறது என தோன்றியதால் என்னுடைய பதிலை வைத்தேன். என்னுடைய பதில் வெண்முரசு குறித்த விரிவான விமர்சனம் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியும். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான சுருக்கமான, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73581/

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818/

வெண்முரசு தகவல்கள்

வெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது. கணிப்பொறி நிரல் எழுதி எடுக்கப்பட்டது. சில தவறுகள் இருக்கலாம். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஹரீஷ் https://docs.google.com/document/d/1whmDwla1ExwpPsJihPDEendKWpcTv8PfY5Yur8CWaWI/pub

Permanent link to this article: https://www.jeyamohan.in/72033/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40

பகுதி எட்டு : மழைப்பறவை – 5 அந்திசாயும் நேரத்தில் அஸ்தினபுரியில் இருந்து எண்பது காதத்துக்கு அப்பால் இருந்த இருண்ட குறுங்காட்டுக்குள் முந்நூறு சிறிய நீள்படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவை கங்கையில் விரைந்தோடும் காவல்படகுகள். எஞ்சியவை மீன்பிடிப்படகுகள். அவற்றின் அடிப்பக்கத்தில் தேன்மெழுகு உருக்கி பூசப்பட்டிருந்தது. படகுகள் மீதும் பாய்களிலும் கருமைகலந்த தேன்மெழுகு பூசப்பட்டிருந்தது. தச்சர்கள் அவற்றின் சிறிய கொடிமரங்களை விலக்கிவிட்டு பெரிய கழிகளை துளையில் அறைந்து நீளமான கொடிமரங்களை அறைந்து நிறுத்தினர். அரக்கையும் களிமண்ணையும் உருக்கி அவற்றை அழுத்தமாகப் பதித்தனர். நூறு தச்சர்களும் மீனவர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66149/

Older posts «