Tag Archive: வெண்முரசு விழா

வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே, ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பனையாளராக இருந்தாலும்! ஜெயமோகனின் பதில் எனக்கு திருக்குறள் ஒன்றை நினைவிற்கு வரவழைத்தது. சொல்லுக சொல்லைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65750

விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிசாரி மோகன் கங்குலி என்ற வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட “The Mahabharata” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அருட்செல்வப்பேரரசன் செய்து வருகிறார். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியதைத் தனி ஒருவராக செய்துவருகிறார். மேலும் ஆடியோ கோப்புகளையும் பதிவிறக்கத்திற்குத் தந்து வருகிறார். அவரைக் கவுரவிக்கும் விதமாக பிரபஞ்சன் அவர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்குவார்” என்று அறிவித்தார். அருட்செல்வப்பேரரசன் பதிவு வெண்முரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65620

விழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி

நேற்று நடந்த வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழிமாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். அதற்கு அனுமதி தந்தும் தராமலுமான ஒரு குழப்பமான நிலை. பலர் கைது செய்யப்பட்டிருந்தனர் போலும். கூட்டம் நிரம்பி, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள். பலர் நின்றுகொண்டிருந்தனர். நான் பிரசன்னாவுக்கும் ஜடாயுவுக்கு இடையில் மிக வசதியான ஓரிடத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். 5.15-க்கு சிறப்பு விருந்தினர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65614

வெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து

Permanent link to this article: https://www.jeyamohan.in/65388

வெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு

வெண்முரசு விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு பற்றி அறிவித்திருந்தோம். ஆனால் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருப்பதனால் வேறுவகை ஒளிபரப்புகள் நடத்த முடியாத நிலை. விஜய்டிவியில் சிலநாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/65384

ஒரு சந்திப்பு

ஒரு திடீர் சந்திப்பு. வெண்முரசு விழாவுக்காக வெளியூரில் இருந்து வந்த நண்பர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு, இந்த விலாசத்தில். ஓய்விருப்பவர்கள் வரலாம் Bala, I-21, Chaithanya nest, 9 A, Rathna Nagar main road, Off: cenotaph road, Teynampet, Chennai – 600018

Permanent link to this article: https://www.jeyamohan.in/65366

விழா- வாழ்த்துக்கள்

மேலாண்மை ஆலோசகர் தேசிகாமணி அவர்களின் வாழ்த்து ராமராஜன் மாணிக்கவேல் வாழ்த்து [EPSB] [/EPSB]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64972

வெண்முரசு விழா ஏன்?

வெண்முரசு விழாவைப்பற்றி நான்கு கடிதங்களில் வசையும் ஏகத்தாளமுமாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது ஒரு விற்பனை- சுயமுன்வைத்தல் ‘ஷோ’ என்பதுதான் அது. சாராம்சத்தில் அது சரிதான். இவ்விழாவின் நோக்கம் வெண்முரசு நாவல் வரிசையை மேலும் அதிகமாக விற்க வைப்பதே.அதன் பொருட்டு இம்முயற்சியையும் இதன் முக்கியத்துவத்தையும் பொதுவாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதே. ஆகவேதான் பொதுவாசகர்கள் கவனிக்கும் ஆளுமைகளுடன் பெரிய அளவில் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. என்னுடைய பிறநூல்களுக்கு இது தேவைப்பட்டதில்லை. வெண்முரசு நூல்கள் அளவில் பெரியவை. தொடர்ச்சியாக வருடம் நாலைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64754