Tag Archive: ‘வெண்முகில் நகரம்’

கோட்டை

அன்புள்ள ஜெ, மலைகளின் மடி கனத்துக் கொண்டே செல்கிறது. எளிமையான மலைக்குடிகள் இன்று வலுவான கூட்டமைப்பாகிவிட்டனர். இன்றைய அத்தியாயத்தின்(வெண்முகில் நகரம் 31) இறுதியில் மறிமானுடன், எருது சகிதம் வரும் பிதாமகரின் தோற்றம் அனைத்தையுமே இணைத்து விட்டது. (ஏனோ நீலகண்ட பறவையைத் தேடி நாவலில் மணீந்திர நாத் ஆற்றிலிருந்து எழுந்து வரும் அந்த தோற்றம் நினைவுக்கு வந்தது!) பூரிசிரவஸ் குருஷேத்ரத்தில் ஓர் பெருவீரனாக மட்டுமே எனக்கு அறிமுகம். அவனைச் சுற்றி ஓர் அழகான குறுநாவல் இப்பகுதி. இன்றைய அத்தியாயத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72389

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’

பொதுவாக வெண்முரசு நாவல்களின் பிரசுரமாகும் பகுதிகளுக்கு ஏழெட்டு பகுதிகள் முன்னதாகத்தான் நான் எழுதிச்சென்றுகொண்டிருப்பேன். சிலசமயம் பதினைந்து பகுதிகள் கூட முன்னதாக சென்றிருக்கிறேன். நீலம் நெருக்கடியை சந்தித்தது. அன்றன்று எழுதி அன்றன்று பிரசுரமாக வேண்டியிருந்தது. காரணம் அது அன்று என்ன தோன்றுகிறதோ அதனடிப்படையில் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க அது கனவு. பிரயாகையில் ஒரு தொடர்ச்சி இருந்தது. ஆகவே தொடர்ந்து எழுதிச்செல்ல முடிந்தது. ஆனால் ஒரு ஒழுக்கு முடிந்து அடுத்தது தொடங்குவதில் இடைவெளி நிகழ்ந்தது. மனம் எழவேயில்லை. நாள்கள் ஓடிச்சென்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70125