Tag Archive: வெண்டி டானிகர்

வெண்டி டானிகர் -கடிதம்

அன்பு ஜெயமோகன், வென்டியின் நூலை ஏற்கெனவே தேவைப்பட்ட வேளைகளில் எல்லாம் நான் புரட்டிப் பார்த்ததுண்டு. ஏறத்தாழ 700 பக்கங்கள் கொண்ட அந்த நூலை இன்னும் நான் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. இதற்கிடையே John D. Smith மொழிபெயர்த்து, Penguin வெளியிட்ட, அண்ணளவாக 800 பக்கங்கள் கொண்ட The Mahabharata நூலை நான் முழுமையாக வாசிக்க நேர்ந்தது. அது வென்டியின் நூலை மறுபடியும் வாசித்துப் பார்க்க என்னைத் தூண்டியது. அருகிலுள்ள கனடிய நூலகத்தில் இரவல்பெற்ற இவ்விரு நூல்களும் என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46631

வெண்டி டானிகர் – மீண்டும்

டானிகரின் புத்தகம் குறித்த உங்கள் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளை வாசித்தேன். இன்று டானிகரை ஆதரிப்பவர்கள் மனு ஸ்மிருதி குறித்த அவரது கருத்துக்களுக்காக அவரை நிச்சயம் எதிர்ப்பார்கள். அதே சமயம், அவரது இந்நூலில் அவதூறுகளும் குறைகளும் உண்டு. அந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைகள் விரவிக் கிடக்கின்றன. அவற்றை பேசும் ஒரு நீண்ட மதிப்புரையை இந்த தளத்தில் படிக்கலாம். http://vishalagarwal.voiceofdharma.com/articles/thaah/ நன்றி

Permanent link to this article: https://www.jeyamohan.in/46590

வெண்டி டானிகர் – எதிர்வினைகள்

அன்புள்ள ஜெ , வென்டி டானிகர் புத்தகம் குறித்த தங்கள் கட்டுரையும் அதைக்குறித்து நீங்கள் வாசித்த மதிப்புரை சுட்டியையும் படித்தேன்.அந்த மதிப்புரையைத தவிர வேறு எந்த ஒன்றையும் நீங்கள் படித்தீர்களா தெரியவில்லை.நான் டானிகரின் புத்தகத்தை படித்தேன். இந்த மதிப்புரையில் கூறப்படுவது போல அவதூறை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை டானிகரின் புத்தகம் ஏறக்குறைய 800 பக்கங்கள் கொண்டது அதில் மேற்கண்ட மதிப்புரை ஒரே ஒரு பத்தியை மட்டுமே மேற்கோள் காட்டி மொத்தப் புத்தகத்தையும் நிராகரிக்கிறது.அந்தப் பத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46539

வெண்டி டானிகரும் இந்தியாவும்

வணக்கம் தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவா?உண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்ன? மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு செ. நிஜந்தன் அன்புள்ள நிஜந்தன், நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநிலையிலும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46489