Tag Archive: வெண்கடல்

வெண்கடல்- கடிதங்கள்

ஜெவின் சில கதைகள் போல இந்தக் கதையிலும் ஆண்கள் உணர்ந்து கொள்ள முடியாத பெண்ணின் வலி, தாய்மை போன்றவை வருகின்றன என்று நினைத்தேன். ஆனால் அது மட்டும் கதையல்ல என்றும் தோன்றுகிறது. முதலில் இந்தக்கதையிலும் creativity பற்றிய கேள்வியையே ஜெ தொடர்கிறார் என்று தோன்றியது. (பெண் சிருஷ்டியின் குறியீடு. எங்கிருந்தோ சுரக்கும் வெண்கடலை அந்தப் பெண், மாடுகள், தாய்தெய்வங்கள் வழியாக அடையாளம் காண்கிறார். தன்னுள்ளா? அல்லது பிள்ளையாகவா?) ஆனால் கடைக்கண் பற்றிய உரையாடல்கள், சித்திரங்கள் என்னை சிதறடித்துவிட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35079

வெண்கடல் – கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். வெண்கடல் அற்புதமான கதை. கண் கலங்க வைக்கும் கதை. ஆணுலகம் பெண்ணுக்கு வரையறை சொல்லும் பொழுது, குழந்தையால் தாயின் கடைக்கண் எங்கு செல்லும் என சொல்ல முடிகிறது. வளரும் பொழுது எங்கோ இழந்து விடுகிறோம். அம்மா என்பவள் அன்பொன்றாலே நிறைந்தவள் என சொல்லியது. ஆண் புத்திசாலி ஆகிறான், காதலிக்கின்றான், உழைக்கின்றான், ஆனால் அம்மா ஆவதே இல்லை. அவள் கடைக்கண் அன்பை கண்டுகொள்ளும் வல்லமை வேண்டியதன் அவசியம் இந்தக் கதையில் உண்டு. நாவால் வருடும் காளி, எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34986

வெண்கடல்- கடிதங்கள்

அன்பின் ஜெயன் உங்கள் வெண்கடல் வாசித்தேன். ஒரு கதைக்குள் இத்தனை சிந்தனைகளா? அன்னையின் முலைப்பால் அமிர்தப் பாற்கடல் அல்லவா அதை உண்டுதானே மனித குலம் உயிர் தழைக்கிறது. அவள் கடைக்கண் இல்லையேல் மனித குலம் வாழ்வது எப்படி? பெண்மையைப் போற்றும் உங்கள் எழுத்துக்கள் காலம் கடந்தும் வாழும். அன்பின் கலா அன்புள்ள கலா நீண்ட இடைவெளிக்குப்பின் கடிதம் நலம்தானே? வெண்கடல் ஒரு பழைய நினைவு. நினைவுகள் பழைமையாகும்போது மலைச்சரிவில் உருளும் பாறைகளைப்போல மேலும் நூறுபாறைகளை உருளச்செய்துவிடுகின்றன ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35064

வெண்கடல் [புதிய சிறுகதை]

’கடைக்கண்ணுன்னு ஏன் சொல்லுகான், அதைச்சொல்லிட்டு மேலே பேசுலே’ என்றார் கணேசமாமா. காயத்திருமேனித்தைலம் சுண்டிவரும்போது நாக்கில் எச்சிலூறும் ஒரு தின்பண்ட வாசனை எழும். நான் அதில் முழுமையாக ஈடுபட்டு இருந்தேன். பச்சைநிறமான திரவம் ஏதோ ஒரு புள்ளியில் நல்லெண்ணைநிறமாக ஆகத்தொடங்கும். அப்போது கொட்டம் போடுவார்கள். உடனே அதை நாக்கு புறக்கணிக்க ஆரம்பிக்கும். அதனுடன் வாதக்கால்களும் வாதக்கைகளும் சதைவுகளும் ஒடிவுகளும் சம்பந்தப்பட ஆரம்பிக்கும். ‘நீரு காயத்திருமேனி வேங்க வந்தீருண்ணா அந்தச்சோலியப்பாருமே’ என்றார் அப்பு அண்ணா காயத்திருமேனியைக் கிண்டியபடி. பெரிய உருளியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34925

» Newer posts