Tag Archive: வெங்கட் சாமிநாதன்

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என புரிந்துகொண்டிருக்கிறார். அதை பேட்டி என்பதை விட மனுவை வாசித்துக்காண்பித்து கையெழுத்து வாங்குவது என்று சொல்லலாம்.  கிரா கொஞ்சம் மழுப்பி, ஊடே கொஞ்சம் தன் கருத்தையும் சொல்லி, கடந்து சென்றிருக்கிறார். கி.ரா கூடுமானவரை சி.என்.அண்ணாத்துரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக சமஸே ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119621

வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு

ஜெ, சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன? அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா? ராஜாராம் [எம் ஏ நுஃமான்] அன்புள்ள ராஜாராம், எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80088

வெங்கட் சாமிநாதனும் சிற்றிதழ் மரபும்

அன்புள்ள ஜெ, வாசக விடலை ஒருவர் [சிவராமன்] எழுதியிருக்கும் கடிதத்தை ஒரு சிறு எதிர்வினை கூட இல்லாமல் நீங்கள் வெளியிட்டிருப்பது ஏமாற்றமும் வருத்தமும் வேதனையும் அளிக்கிறது – பொதுவாக இது உங்களது பாணி அல்ல என்று நான் கருதுவதால். .”நண்பர்கள் சொன்னார்கள்” என்பது என்ன வகையான கருத்து? இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி கடிதம் எழுதும் ஆள், இணையத்தில் கொஞ்சம் தேடினாலே வெ.சா எங்கெங்கு என்ன எழுதியிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்குமே.. வெ.சா சொல்வனம், திண்ணை, தமிழ்ஹிந்து, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80078

வெங்கட் சாமிநாதன் – கடிதங்கள்

ஜெ, வெசா பற்றிய அஞ்சலிகள்…எத்தனை முரண்கள் இருந்தாலும் அவர் ஆளுமையை அனைவருமே போற்றுகின்றனர்.அவரது கட்டுரைகள் நூல்கள் நிறைய வாசித்திருக்கிறேன்.நாட்டார் கலைகள் பற்றிய அவரது பதிவுகள் நான் விரும்பிப்படித்தவை. நான் பகிர எண்ணுவது இதைத்தான்,இலக்கியவாதிகளின் மறைவு எனக்குள் சட்டென ஒரு மன வெறுமையை உண்டாக்கிவிடுகிறது.ஜெயகாந்தன் மறைவு ஏற்படுத்திய தாக்கம் குறைய எனக்கு நீண்ட நாள் ஆனது.வெசாவின் மறைவில் அவரைப் பற்றியே வாசித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக மரணங்களை நான் கடந்து சென்றுவிடுவேன்.நான் முன்பு மருத்துவத் துறையில் இருந்தது காரணமாயிருக்கலாம்.உறவுகள் நட்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80007

சொல்புதிது வெ.சா சிறப்பிதழ்

ஜெ, நீங்கள் நடத்திய “சொல்புதிது” இதழின் வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழில் இருந்து உங்கள் அறிமுகம், வெ.சாவின் கட்டுரை மற்றும் வேதசகாய குமாரின் கட்டுரைகளை ஸ்கேன் செய்து பதிவேற்றி இருக்கின்றேன். Images – Images – https://drive.google.com/open?id=0ByEEpeswRBmdbTZvcFJfbEM2SU0 Pdf – https://drive.google.com/open?id=0ByEEpeswRBmddGhOaTJNSzgxazQ ஏ.வி.மணிகண்டன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/80002

வெ.சாமிநாதன் சில பக்கங்கள்

திகசி பற்றி வெ.சாமிநாதன் வெ.சாமிநாதன் தமிழமுதம் பேட்டி தமிழ் நாட்டார் கலைகள் வீழ்ச்சியடைவது பற்றி வெ சாமிநாதன் தமிழ் இசைமரபு வெ சாமிநாதன் தமிழ் இலக்கியம் ஐம்பது வருட மாற்றமும் வளர்ச்சியும் பாலையும் வாழையும் நூலுக்கு செல்லப்பா எழுதிய முன்னுரை பயணத்தின் அடுத்த கட்டம் வியப்பளிக்கும் ஆளுமை சாமிநாதன் நேர்காணல்ச திருமலைராஜன் பகுதி இரண்டு பகுதி மூன்று

Permanent link to this article: https://www.jeyamohan.in/79911

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

நேற்று மதியம் சென்னையில் வெங்கட் சாமிநாதனைப்பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது மூர்க்கமான பேரன்பு பற்றி. மூன்றுமுறை வெ.சாவிடம் என் நண்பர்களுக்கு வேலை கிடைக்க, பொருளியல் இக்கட்டை சமாளிக்க உதவும்படி கோரியிருக்கிறேன். ஒருவர் அவரை மோசமாக விமர்சித்து எழுதியவர். பிற இருவரையும் அவருக்கு எவரென்றே தெரியாது. ஆனால் வெ.சா இறங்கிப் பணியாற்றி அவர்களுக்கு உதவினார். அவர்கள் வாழ்க்கையின் திருப்புமுனைகளுக்குக் காரணமாக அமைந்தார். ஏனென்றால் வெ.சாவை குருபீடத்தில் வைத்துள்ள பலர் உண்டு. அவருடன் மிக அணுக்கமான உறவுள்ளவர்கள் நிறையபேர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79901

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687

மொழியாக்கம் பற்றி

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கடந்த இரண்டு வருடங்களாக தங்களது எழுத்துக்களைப் படித்து வருகிறேன். தங்களது தீவிரமான வாசகர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை உண்டு எனக்கு. இங்கு என் அலுவலகத்தில் கன்னட நண்பர் ஒருவர் நல்ல வாசகர். சமகால சிறந்த கன்னட சிறுகதைகளை ஆடியோ வடிவில் மாற்றம் செய்வதில் நண்பர்களுடன் ஈடுப்பட்டுள்ளார். அவரிடம் அவ்வபோது கன்னட இலக்கியங்களை பற்றி பேசுவது உண்டு. எஸ். எல் பைரப்பா, அனந்தமூர்த்தி பற்றி பேசும் போது அவரிடம் ஒரு வகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63757

அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்

’அந்தக்கால எழுத்தாளர்கள் சிந்தனைகளை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்கள். இப்போதைய எழுத்தாளர்கள் வெறும் விவாதங்களைத்தான் உருவாக்குகிறார்கள்’ இந்தவரி இப்போது பிரபலமாக இருக்கிறது. ஒருவாரத்தில் பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இப்போதுள்ள விவாதங்களின் பின்னணியில் இதை நீங்கள் விளக்கவேண்டும் என்று நினைக்கிறேன் ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், அனேகமாக இது ஏதோ ஃபேஸ்புக் மேதையின் வரியாகத்தான் இருக்கும். எதையும் யோசிக்காமல் வாசிக்காமல் பேசுவதற்கான இடம் அது. இந்த தளத்திலேயே இதற்கிணையான கேள்விகளுக்கு மிகவிரிவான, ஆதாரபூர்வமான பதில்கள் பத்துமுறைக்குமேல் எழுதப்பட்டுள்ளன. ஒரு எளியவாசகன், அடிப்படை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57570

Older posts «