Tag Archive: விஸ்வசேனர்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8

கௌரவப் படையின் பருந்துச்சூழ்கையின் அலகுமுனை என விஸ்வசேனரால் செலுத்தப்பட்ட பீஷ்மரின் தேர் நின்றிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு தேர்வில்லவரும் ஆயிரத்தெட்டு பரிவில்லவரும் கொண்ட அணுக்கப்படை பருந்தின் நெற்றியிறகு என வகுக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வில்லவர்களில் ஒருவனான சுஜயன் தன் நிழல் நீண்டு களத்தில் விழுந்திருப்பதை நோக்கியபடி நின்றான். அவன் கையிலிருந்த வில்லின் நிழல் கரிய நாகம்போல் நெளிந்து கிடந்தது. அவன் அம்பை தூக்கி நிழலில் பார்த்தான். அது கூர்கொண்டிருக்கவில்லை. அதனால் ஒரு இலைக்குருத்தைக்கூட கிழிக்க முடியாது. அவன் புன்னகைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112899

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–12

 பகுதி இரண்டு : பெருநோன்பு – 6 தேர் உருளத்தொடங்கியதுமே அசலை சினத்துடன் காந்தாரியிடம் “அவர் நம்மை தவிர்க்கிறார். எது மெய்யோ அதை எதிர்கொள்ளாதொழிகிறார்” என்றாள். “அது முதியவர்களின் இயல்பு. அவர்களின் உள்ளம் ஆற்றல் இழந்திருக்கிறது. உணர்வுகள் தொடர்ச்சியை இழந்துவிட்டிருக்கின்றன. புலன்கள் கூர் மழுங்கியிருக்கின்றன. ஆகவே சூழ நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒன்றோடொன்று பொருத்தி முழு வடிவாக உருவாக்கிக்கொள்ள அவர்களால் இயல்வதில்லை. தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றை முற்றாக தவிர்ப்பது முதியவர்களின் இயல்பு. தாங்கள் இளமையில் புரிந்துகொண்ட மெய்மையை திரும்பச் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105163

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–11

பகுதி இரண்டு : பெருநோன்பு – 5 அரசத்தேருக்கு காவலாகச் சென்ற புரவிவீரர்கள் குடில்முற்றத்தில் சென்று பரவி நின்றனர். குடிலிலிருந்து பீஷ்மரின் மாணவர் விஸ்வசேனர் தன் மாணவர்களுடன் கைகூப்பியபடி வெளியே வந்தார். தேர் குடிலின் முற்றத்தில் நுழைந்து நின்றது. புரவிகள் குளம்பு மாற்றிவைத்து பிடரி சிலுப்பி தலைகுலுக்கி பெருமூச்சுவிட்டன. அவற்றின் வியர்வை இளவெயிலில் ஆவியாக எழுந்தது. வீரர்களில் ஒருவன் வந்து தேரின் கதவைத் திறந்து மரப்படிக்கட்டுகளை எடுத்து வைத்தான். அசலை கைகளைக் கூப்பியபடி படிகளினூடாக இறங்கி கீழே நின்று காந்தாரியை கைபற்றி மெல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105152

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35

[ 7 ] கன்யாவனத்தின் எழுபத்தேழாவது சுனை சௌபர்ணிகம் என்றழைக்கப்பட்டது. அதன் கரைகள் நீலநிறமான பாசிபடிந்த வழுக்குப்பாறைகளால் ஆனவை. உள்ளே நலுங்காத நீர் வானத்துளியாக கிடந்தது. அதன் பாசி படிந்த பரப்பைக் கடந்து வரையாடுகள்கூட நீர் அருந்த இறங்குவதில்லை. அந்நீரில் விழுந்த எவரும் நீந்தி கரையேறியதில்லை. அதன் நீர் பனியைவிட குளிர்ந்தும் ஆயிரம் யானைகளின் துதிக்கைகளால் மையம்நோக்கிச் சுழற்றி இழுக்கும்படியான விசைகொண்டதாகவும் இருந்தது. நூற்றாண்டுகளாக எக்காலடியும் படாத பாறைகள் காத்திருப்பின் பருவடிவமென நின்றன. கைகளோ மூச்சோ படாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87413