Tag Archive: விஷ்ணுபுரம்

பெளத்தமும் விஷ்ணுபுரமும்

  ஜெயமோகன் விஷ்ணுபுரம் நூலை எழுதிய பின்னர் அதில் கெளஸ்துபம் பகுதியில் வரும் தத்துவ விவதாங்களை பற்றி அறிமுகத்தை உருவாக்கும் பொருட்டு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை எழுதினார்.அதே கெளஸ்துபம் பகுதியில் வரும் பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதியுள்ள நூல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்தக் கருத்துக்கள்”.கிருஷ்ணன் இந்த நூலில் விஷ்ணுபுரத்தின் கெளதுஸ்பம் பகுதியில் வரும் பெளத்த கருத்துக்களை பற்றி மட்டும் தன் மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126115/

அவ்வாறே வந்தவர்

இனிய ஜெயம் சிலவாரங்கள் முன்பு ,அதாவது திசைதேர் வெள்ளம் முடிந்த மறுநாள் ,  ஒரு சிறுபயணம் என  திருச்சி சென்றிருந்தேன் . சாரல் மழையில் மலைக்கோட்டை  உச்சிப்பிள்ளையார் கோவில் வாசல் ,எதிரே சின்னக்கடை வீதி இறுதி வரை நடந்தேன் .தைலா சில்க் கடந்தால் ,தேவதி புக் ஸ்டால் . லெண்டிங் லைப்ரரி . புதிய நூல்கள் பத்து சதமான தள்ளுபடி விலையிலும் ,வாடகைக்கு சுற்றிவரும் நூல் ,விலைக்கு எனில்  நாற்பது சதமான தள்ளுபடி விலையிலும் கிடைக்கும் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117264/

காடு, நிலம், தத்துவம்

அன்புள்ள ஜெ., நலமாயிருக்கிறோம். இசையும் மொழி தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி. கடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று. ஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99910/

ஒளிர்பவர்கள்

திரு ஜெயமோகன் உங்களுக்கு வந்த கடிதம் எப்படி எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. நீங்கள் நகைச்சுவையாக ஆக்கி கடந்துசெல்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரியத்தான் செய்யும். இதைவேண்டுமென்றால் வெளியிடுங்கள். உங்களை இலுமினாட்டி என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் அந்தளவுக்கு பெரிய ஆள் இல்லை. இல்லுமினாட்டி என்பது ஒரு சிலந்தி. அதன் வலை உலகம் முழுக்க உள்ளது. அந்த வலையிலே ஒரு கண்ணி நீங்கள். தமிழக அளவிலே நீங்கள் அதிலே முக்கியமானவர். நீங்கள் இதுவரை மீடியாவிலேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97024/

உள்ளே இருப்பவர்கள்

சுஜாதாவுடனான என் உறவு ஆரம்பிப்பது அவர் குமுதத்தில் எழுதிய அனிதா இளம் மனைவி என்ற தொடர்கதையில் இருந்து. அதுதான் அவரது முதல் தொடர்கதை. பிற்பாடு அதிகம்பேசாத அறிவுஜீவியாக உருவான கணேஷ் என்ற கதாபாத்திரம் அதில் கொஞ்சம் வசந்த் சாயலுடன் வந்து துப்பறிந்தது. அந்தத் தொடர்கதையின் மொழிநடை அந்த ஆரம்பநாட்களிலேயே என்னை ஈர்த்தது. நான் அன்றெல்லாம் உடனுக்குடன் வாசகர்கடிதம் எழுதக்கூடியவன். பிரசுரநோக்கம் இல்லை. என் எண்ணங்களை எழுதுவேன். பலபக்கங்களுக்கு. அதன் வழியாகவே நான் எழுத்தாளனாக ஆனேன் என்று சொல்லலாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29099/

அழியாக்கனவு

  இனிய ஜெயம், விஷ்ணுபுரம் நாவல் மற்றொரு புதிய பதிப்பாக வரும் தருணம் இது. வெய்யோன் முடிந்த இடைவெளியில் விஷ்ணுபுரம்தான் புரட்டிக் கொண்டிருக்கிறேன். இன்றும் பிரமிப்பு குறையாத ஆக்கம். அந்த நாவலை முதன் முதலாக கைக்கொண்ட தினங்களை இன்று நினைக்க மனமெல்லாம் தித்திப்பு. அன்றெல்லாம் அதை எப்போதும் கையில் காவிக்கொண்டே திரிவேன். தூங்குகையில் தலைமாட்டில் விஷ்ணுபுரம் இருக்கும் [அதன்மேல் என் கண்ணாடி] . விழித்ததும் ஏதேனும் பக்கத்தை புரட்டி ஒரு வாசிப்பு.நிகழ்த்துவேன். அதே புத்தகத்தைதான் இன்றும் வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85848/

புதுயுக நாவல்

  ஜெ பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்து இப்போதுதான் முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்கும்போது மெல்லிதாக தோன்றியது. பின்பு வெண்முரசு நாவல்தொடர் வாசிக்கும்போதும் தோன்றியது. [கொற்றவை இன்னும் வாசிக்கவில்லை] இந்நாவல்கள் எல்லாமே சிதறிக்கிடக்கின்றன. ஒரு மையத்தொடர்ச்சியை நாமேதான் கொஞ்சம் கஷ்டப்பட்டு உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விஷ்ணுபுரமும் வெண்முரசுநாவல்களும் அவற்றின் மைத்தாலஜிக்கல் பின்னணி காரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலைக் கையாள்வதனால் அது ஒரு ஒருமையை உருவாக்குவதுபோலத் தோன்றுகிறது, உண்மையில் அப்படி இல்லை. சொல்லப்போனால் உங்கள் நாவலின் ஒரு பகுதி இன்னொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85653/

அலகிலாதவை அனைத்தும்

  விஷ்ணுபுரம் நாவலின் மீண்டுமொரு பதிப்பு வெளிவரும் இத்தருணத்தில் அந்நாவலை எழுதநேர்ந்த உளஎழுச்சிகளை நினைத்துக்கொள்கிறேன். நெடுநாட்களுக்கு முன் நண்பர்களுடன் திருவட்டார் ஆதிகேசவன் பேராலயத்திற்குச் சென்று அங்கே அக்கரு என்னில் விழுந்த அன்று நான் படுத்திருந்த அந்த மண்டபத்தை நோக்கினேன். அங்கிருந்த சிலைகள் அனைத்தும் என்னை விழிதொட்டு பேசமுற்படுவதுபோலத் தோன்றியது. அவை நம்முடன் பேசும் என்பதை அங்கே படுத்திருக்கையில் கண்ட கனவுகளில் அறிந்திருக்கிறேன். அச்சொற்களால் ஆனது விஷ்ணுபுரம் அந்த மொழிநடையில், கூறுமுறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85241/

விஷ்ணுபுரம் மீண்டும்…

    அன்புள்ள ஜெ அன்புடன் ஆசிரியருக்கு கிரீஷ்மன் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். படிக்கத் தொடங்கும் போது ஹேமந்தன் சொல்லி முடிக்கிறான். நான் வசந்தனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஏன் குறைத்துச் சொல்ல வேண்டும் என விஷ்ணுபுரம் மௌனமாக உணர்த்திவிட்டது. புதுவகையான இலக்கிய ஆக்கம் என்பதால் விஷ்ணுபுரத்தின் கதை மாந்தர்கள் மனதில் அதிக குழப்பத்தையும் திருப்தியின்மையையும் விளைவிக்கிறார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது விஷ்ணுபுரத்தின் எந்த அத்தியாயமும் எந்த பாத்திரமும் முற்றுபெறவே இல்லை எனத் தோன்றுகிறது. தீராத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84941/

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644/

Older posts «