Tag Archive: விஷ்ணுபுரம் விழா

விழா- கடிதங்கள் 2

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். விஷ்ணுபுரம் விழா அளித்த இனிய நினைவுகளை மனதில் மீட்டிக் கொண்டே இருக்கிறேன். நன்றி. நான் உள்ளே நுழையும் போது நீங்கள் பலராமர் குறித்து பேசிக் கொண்டிருந்தீர்கள் அதன் பின் தேவதச்சன் அவர்கள் உள்ளே நுழைய மெல்ல அவருடைய கவிதை நோக்கி உரையாடலும் கவனமும் குவிய துவங்கியது. மாலை ஜோ டி குரூஸ் உடனான உரையாடல். இதை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை. கிட்டத்தட்ட களிறு புகுந்தது போல உள்ளே நுழைந்தார். பொதுவாக உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82428

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68633

விஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்

விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வரும் நண்பர்கள் தங்கவும், கலந்துரையாடவும் கீழ்க்கண்ட மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கிச்செல்லும் நண்பர்கள் முன்னரே தெரிவித்தால் இரவு உணவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். விஜய் சூரியன் 99658 46999 Rajasthani Nivas 33, Periaswamy Road East, R.S.Puram, Coimbatore – 641 002 Phone : 91 – 422 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68585

விஷ்ணுபுரம் விழா -சுரேஷ்

விஷ்ணுபுரம் நண்பர்குழுமத்தில் பாடகராகவும் சிறந்த வாசகராகவும் அறிமுகமானவர் சுரேஷ். கோவைக்காரர். அரசு கணக்காயத்துறை அதிகாரி. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் தொடர்ச்சியான வாசிப்பு கொண்டவர். இன்று நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் சுரேஷ் தெளிவத்தை ஜோசப் பற்றி பேசுகிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/43357

விஷ்ணுபுரம் விழா– பாலசந்திரன் சுள்ளிக்காடு

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் இம்முறை மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு கலந்துகொள்கிறார். வரலாற்றில் அபூர்வமாக மிக இளம் வயதிலேயே சில கவிஞர்கள் ஒரு பண்பாட்டை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்கள். அப்பண்பாட்டின் முந்தையதலைமுறைகளிடம் பாரம்பரியத்திடம் இளையதலைமுறைக்கு என்னென்ன சொல்வதற்கிருக்கிறதோ அனைத்தையும் அவர்கள் வழியாக வெளிப்படுத்துகிறது காலம். அவ்வாறு விதியால் தேர்வுசெய்யப்பட்ட கவிஞன் ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவன், அவனுக்கு மரணமில்லை. இன்னொரு வகையில் சபிக்கப்பட்டவன், தன் காலகட்டத்தின் அனைத்து வலிகளையும் அவன் அனுபவிக்கிறான். உலக இலக்கியத்தில் அவ்வாறு இளமையின் அனலை குரலில் ஏந்தி வந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42665