Tag Archive: விஷ்ணுபுரம் விருது

தேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2

அன்புள்ள ஜெ தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தி மகிழ்ச்சி அளித்தது. நான் எண்பதுகளில் ஓரளவு கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் கவிதைகளுக்கான மனநிலை இல்லாமல் போய்விட்டது. கவிதைக்கான மனநிலை ஏன் இல்லாது போகிறது என்பதை யோசித்தபோது எனக்கு முக்கியமாகத் தோன்றிய விஷயம் ஒன்றுதான். கவிதை நம்முடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றியதானாலும் அதன் சாராம்சம் நம் அன்றாட வாழ்க்கையில் இல்லை. அது ஆன்மிகமானது. தத்துவார்த்தகனமானது. ஆகவேநாம் நம்முடைய சொந்த முயற்சியினால் அதை வைத்துக்கொண்டிருக்கவேண்டும். பென்சிலைக் கூர் சீவுகிற மாதிரி நம்முடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78475/

தேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1

வணக்கம் ஜெயமோகன் , எப்படி இருக்கீங்க? அஜிதன் இப்ப என்ன பண்ணுகிறார் ? குடிப்பழக்கம் எந்த அளவிற்கு அடிமட்ட மக்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் தி இந்துவில் எழுதிய கட்டுரை மதுவின் கோரத்தை நெருக்கமாக உணர வைத்தது. சமகாலத்தில் என்னை மிகவும் பாதித்த கவிஞரான தேவதச்சன் அவர்களுக்கு உங்கள் அமைப்பிலிருந்து விஷ்ணுபுரம் விருது அறிவித்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். கவிதை நூல்களில் தேவதச்சனின் கவிதை நூல்கள் மட்டுமே வாங்கியிருக்கிறேன் ; படித்திருக்கிறேன். நான் வாசித்தவரையில் வேறு எவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78471/

தேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…

ஜெ தேவதச்சனின் இந்தக்கவிதை என்னை ஒருவகை சோர்வுக்கும் பின்பு ஒரு நிம்மதிக்கும் தள்ளியது. இந்த நீலநிற பலூன் இந்த நீலநிற பலூன் மலரினும் மெலிதாக இருக்கிறது. எனினும் யாராவது பூமியை விட கனமானது எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன். நீங்களாவது கூறுங்களேன், இந்த நாற்பது வயதில் ஒரு பலூனை எப்படி கையில் வைத்திருப்பது என்று… பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன. எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78296/

விஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை

சங்கக் கவிதைகளின் நுட்பம் அவை கவிதையின் வழியே அடையாளம் காட்டும் நிலவெளி காட்சிகள், உணர்வு ஒப்புமைகள். ஒவ்வொரு கவிஞனும் தனக்கென தனியான கவி உவமைகளையும் மொழி நுட்பத்தையும் அகப்பார்வையும் கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிகிறது. தேவதச்சன் கவிதைகளைப்பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் இலக்கியவிருது தேவதச்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/78178/

விஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…

ஜெ விஷ்ணுபுரம் விருது பெற்றிருக்கும் தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள். தேவதச்சன் கவிதைகளை நான் பல சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். அவற்றை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். திரும்பத்திரும்ப அவர்களும் புகைமூட்டமான தரிசனம் பேருணர்வு போன்ற சொற்களை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் காற்று ஆடாத மரத்தைக் கண்டதில்லை என்ற கவிதையை மூன்று படிமங்களாகப்பிரித்து எழுதியிருந்தது ஒரு வாசிப்பனுபவத்தை அளித்தது. அந்தக்கவிதைக்குள் நுழைய ஒரு நல்ல வாசல் சட்டென்று திறந்துகொண்டது. அதைப்போன்ற சிறந்த வாசிப்பனுபவமாக ஆகக்கூடிய விவாதங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78185/

விஷ்ணுபுரம் விருது தேவதச்சன்

அன்புள்ள ஜெ தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி. அறியப்படாத கவிஞர்களை இவ்விருது என்னைப்போன்றவர்களுக்கு அறியப்படுத்துகிறது. நான் கவிதைகளை நிறைய வாசிப்பவன். எனக்குப்பிடித்தக் கவிஞர் சுகுமாரன். தேவதச்சன் கவிதைகளை வாசிக்கும்போது அவரை என் ரசனைக்கு உரியவராகச் சொல்லத்தோன்றவில்லை. அவற்றில் நான் கவிதைகளில் தேடும் உணர்ச்சிகரமான அம்சம் இல்லை. கவிதைகளுக்குரிய அழகான சொல்லாட்சிகளும் இல்லை. வேறு எந்த கவிதையம்சம் இருக்கிறது என்று சொல்லமுடியுமா என்று கேட்டேன். இப்படி அறிவிப்பு வந்தபிறகுஅவரது கவிதைகளை வாசித்தேன் அப்போதும் எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78183/

விஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து

என் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் எஸ். ராமகிருஷ்ணனின் பாராட்டு. அவரது இணையதளத்தில் தேவதச்சன் பற்றி இணையத்தில் கிடைக்கும் அனைத்துச்செய்திகளையும் தொகுத்திருக்கிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/78195/

தேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது

ஜெ, தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவரது கவிதைகளை அவ்வப்போது வாசித்தாலும் முழுமையாக வாசித்ததில்லை. அவரைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரமும் என் மனதில் இல்லை. வாசித்தவரை கவிதைகள் நினைவில் நிற்கவில்லை என்றே சொல்லவேண்டும். அவரது கவிதைகளைப்புரிந்துகொள்ள ஒரு வழிகாட்டியாக நீங்கள் எழுதும் நூல் அமையும் என்று நினைக்கிறேன். ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன் கவிதைக்கு பொழிப்புரை போடுவது வழக்கமில்லை. கவிதையைப்பற்றி எழுதுவது என்பது அதற்கு தான் அளித்த வாசிப்பைப் பற்றி எழுதுவதுதான். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78155/

2013 விஷ்ணுபுரம் விருது காணொளி

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது ஈழப்படைப்பாளி தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்பட்டது. அதன் காணொளித் தொகுப்பு. ஒரு மலரும் நினைவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/68618/

விருதுகள்

சாகித்ய அக்காதமி விருது ‘ விஷ்ணுபுரம் வெளிவந்தது 1997ல். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயதுதான். அன்றெல்லாம் வயோதிகர்கள்தான் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள். ஆனாலும் ஒவ்வொருமுறை சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்படும்போதும் என்னைக்குறிப்பிட்டு ஒரு கெக்கலிப்பு கிளம்பிவரும். ‘இந்தமுறையும் ஏமாந்தான்யா’ என்றவகையில். சாகித்ய அக்காதமி விருதுகளை நான் விமர்சித்தேன் என்றால் ‘கெடைக்கலைன்னு புழுங்குகிறான்’ என்பார்கள். பாராட்டினால் ‘சமாளிச்சான்யா’ என்பார்கள்.; நான் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளுக்காக தவம் கிடந்து ஏங்கி ஏமாந்துகொண்டிருப்பதாக எழுதும் அவர்களைக் கூர்ந்து கவனித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68541/

Older posts «

» Newer posts