Tag Archive: விஷ்ணுபுரம் விருது விழா – 2019

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, “ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்? உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை  செய்யத் தொடங்குங்கள்…” முதன்முதலாக விஷ்ணுபுரம் விழாவைத் திட்டமிட்டபொழுது, உங்களுடைய மேற்கண்ட வரிகளின் மனவுச்சத்தில்தான் நீங்கள் இருந்திருப்பீகள் என்று நாங்கள் நினைத்துக்கொள்கிறோம். விஷ்ணுபுரம் நண்பர்களின் பேருழைப்பால் ஒவ்வொரு வருடமும் இந்த சாத்தியம் நிகழ்ந்துகொண்டே இருப்பதில் அளவற்ற அகமகிழ்வடைகிறோம். எல்லா கரங்களுக்கும் நெஞ்சின் நன்றிகள். விரிவானதொரு கடிதத்தின் வழியாக உங்களிடம் மீண்டும் எங்களுடைய நன்றியையும் அனுபவத்தையும் விரைவில் பகிர்கிறோம். வினோத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128948

இன்று விஷ்ணுபுரம் விருது விழா

விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. காலையிலிருந்தே கருத்தரங்கு தொடங்கும். பல்வேறுவகைப்பட்ட படைப்பாளிகளை வாசகர்கள் சந்திக்கும் அமர்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. இடம் ராஜஸ்தானி சங் அரங்கு. மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   அபி முந்தையநாளே வந்துவிடுவார். அவரை சந்திக்க விரும்புபவர்கள் சந்திக்கலாம். இரவில் சந்திப்புகள் முடிந்தபின் வழக்கம்போல இலக்கிய வினாடிவினா. குவிஸ் செந்தில் நடத்துகிறார்.   மறுநாள் காலை 9 மணிமுதல் சந்திப்புகள் நடைபெறும். அபி மற்றும் சிறப்பு விருந்தினர்களுடனான உரையாடல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128689

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

        விஷ்ணுபுரம் விருது விழா காணொளிகள். ஆரம்பநாட்களில் முறையாக ஒளிப்பதிவு செய்து வலையேற்றம் செய்யவில்லை. காணக்கிடைத்தவை இவை. நினைவுகளில் இருந்து எழுகின்றன

Permanent link to this article: https://www.jeyamohan.in/128385

விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை

  அன்புள்ள ஜெ கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை வாசிக்கையில் எல்லாம் நினைத்துக்கொள்வேன், அப்படியொரு இலக்கிய விழா சென்னையில் இல்லையே என்று. இத்தனை எழுத்தாளர்கள் ஓரிடத்தில் கூடி இடைவிடாமல் இலக்கிய விவாதம் நிகழ்வதும் இளம்படைப்பாளிகளும் வாசகர்களும் கூடுவதும் மிகமிக அரிதான நிகழ்ச்சிகள். நான் 2013 ஆம் வருடம் மட்டும் வந்து கலந்துகொண்டேன். டிசம்பர் முடிவில் லீவு எடுத்துக் கிளம்புவது மிகவும் கடினமானது. ஒருநாள் என்றால்கூட வந்துசெல்லலாம். கோவையில் இது ஒரு அருமையான நிகழ்ச்சி என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128485

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம் அன்புள்ள ஜெ   அபி ஆவணப்படத்தின் முன்னோட்டம் அழகாக இருந்தது. நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் ஆகியவற்றைக் காணமுடிந்தது. இங்கே ஆவணப்படங்களுக்கு இடமே இல்லை. உண்மையில் நல்ல ஆவணப்படங்களைக்கூட மக்கள் பார்ப்பதில்லை. எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களுக்கு ஒரு இரண்டாயிரம்பேர் இருந்தாலே அதிகம்.   ஆனால் இவையெல்லாமே பெரிய மதிப்பு பெறும் காலம் வரும் என்று நினைக்கிறேன். ஜெயகாந்தனின் ஆவணப்படத்தை இப்போது பார்க்கையில் அவருடைய உடல்மொழியை ஆவலுடன் பார்க்கமுடிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128476

விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜானவி பருவா

  அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜானவி பருவா. பெரும்பாலும் அசாமிலேயே வளர்ந்து பின்னர் கல்விக்காக வேறு பகுதிகளுக்கு சென்று தற்போது பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். கல்வியால் மருத்துவராக இருந்தாலும் மருத்துவ பணியை விட்டுவிட்டு முழு நேர எழுத்தாளராக மட்டும் இருக்கிறார். இவரின் முதல் சிறுகதை தொகுதி ‘அடுத்த வீட்டு கதவு’ (next door) 2008 ல் வெளியாகியது. இந்த தொகுதி பல்வேறுதரப்பட்ட வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்பட்டது. வடகிழக்கில் இருந்து முதன்முறையாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறுகதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128345

அபியின் அருவக் கவியுலகு-5

பகுதி ஐந்து- அறாவிழிப்பு அபியின் கவிதைகளின் முதன்மையான பலவீனம் ஒன்றைச்சுட்டி இக்கட்டுரையை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஒரே ஒரு மையப்புள்ளியைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் எய்யப்படும் அம்புகள்அவை என்பதே அவற்றின் பலவீனம். அந்த மையப்புள்ளி தவிர பிற திசைதிரும்புதல்கள் இல்லை. பொருளற்ற முயற்சிகள், சரிவுகள் மிகவும் குறைவு என்பதும் அப்புள்ளியைத் தீண்டும்போதெல்லாம் அவர் கவிதைகள் சிறந்த மொழிநிகழ்வுகள், மெய்மையறிதல்கள் ஆகின்றன என்பதும் உண்மையே. ஆயினும் கவிதை என்பது தியானம் மட்டுமல்ல. கவிஞன் என்பவன் யோகி மட்டுமல்ல. அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127847

விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி

கவிஞர் பெருந்தேவி விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கிலும் பரிசளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். தமிழில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் பெருந்தேவி தனக்கென தனித்துவமான கவிமொழி கொண்டவர். எதிர்கவிதை உட்பட பல்வேறு வகையான கவிதை பாணிகளை கையாள்பவர். இலக்கியவிமர்சனக் கட்டுரைகளையும் எழுதிவருகிறார். வாயாடிக்கவிதைகள் பெருந்தேவி வாங்க அசோகமித்திரனை வாசித்தல் வாங்க விளையாட வந்த எந்திரபூதம் வாங்க இக்கடல் இச்சுவை வாங்க உலோக ருசி வாங்க அழுக்கு சாக்ஸ் வாங்க பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் வாங்க ==================================================== …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128271

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்

  விஷ்ணுபுரம் விழாவின் விவாத நிகழ்ச்சியில் இளம்எழுத்தாளர் வெண்பா கீதாயன் கலந்துகொள்கிறார். நெல்லையைச் சேர்ந்த வெண்பா கீதாயன் தமிழ் இலக்கியம் முதுகலை மாணவர். மரபிலக்கியத்திலும் நவீனத்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். நவீனப் பெண்களின் பிரச்சினைகளையும் மரபிலக்கிய அழகியலையும் ஒரே சமயம் எழுதுபவர்   மின்னம்பலம் இணைய இதழில் இவர் எழுதிய நீ கூடிடு கூடலே என்னும் தொடர் இன்றைய பெண் சந்திக்கும் சிக்கல்களை ஆராய்வது. வீழ்கலிங்கச்சுவை கலிங்கத்துப்பரணியின் அழகியல் குறித்த ஆய்வு. வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128268

விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களுக்கு கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா இவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128300

Older posts «