Tag Archive: விஷ்ணுபுரம் விருது விழா 2013

விழா பதிவுகள்

இதுவரை விஷ்ணுபுரம் விருது, ஆ. மாதவன், பூமணி, தேவதேவன் மற்றும் இப்பொழுது தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பூமணி அவர்களைத் தவிர, மற்ற மூவரையும் முன்னர் நான் அறிந்ததில்லை. அந்த வகையில், மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள் இப்படிக்கு இளங்கோ பதிவு படங்கள் டோக்கியோ செந்தில்

Permanent link to this article: https://www.jeyamohan.in/43686

விழா 2013

மீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது என்ற யதார்த்தம் அளிக்கும் சோர்வு அது. மிட்டாயையே மூன்றுவேளையும் உணவாகச் சாப்பிடமுடியாது என்று உணரும் குழந்தையின் நிலை. இருபத்தொன்றாம்தேதி நானும் அஜிதனும் காலையில் தங்குமிடமாக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்திற்குச் சென்றபோது அங்கே முப்பது நண்பர்களுக்குமேல் ஏற்கனவே வந்திருந்தனர். குளித்துக்கொண்டும், உடைமாற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43537

விழா எதிர்வினைகள்

இவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ அல்லது எவர் பேசுவதை கவனித்துகொண்டோ தான் இருந்தேன். தெளிவத்தை, இ.பா, ஜெ, நாஞ்சில், தேவதேவன், யுவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சு.வேணுகோபால், சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ரமேஷ் என படைப்பாளுமைகளுடன் சரி நிகராக அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பது ஒரு அலாதியான அனுபவம். படைப்பிலக்கியலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43552

விஷ்ணுபுரம் விழா -சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் சுரேஷ்குமார இந்திரஜித் கலந்துகொள்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித் ஓர் உரையாடலில் சொன்னார் ‘ கதை மாதிரி எதாவது எழுதிப்பாக்கலாம்னு நினைக்கிறேன்’ அப்போது அவரது இரண்டு சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருந்தன. சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பூமணி தலைமுறைக்குப்பின் வந்த படைப்பாளிகளில் முக்கியமானவர். முன்னோடிகள் உருவாக்கிய வடிவங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்துசெல்லமுயன்றவர்களில் ஒருவர். அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் கதைக்கட்டு [Plot] உணர்ச்சிகரம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் சரியான பொருளில் கதைகள் அல்ல. அவற்றுக்கு தொடக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42692

விஷ்ணுபுரம் விழா- வழக்கமான வினாக்கள்

நாளை மறுநாள் [ டிசம்பர் 22 ] அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் நாளை [21] அன்று காலை கோவையில் வந்திறங்குகிறேன். சென்றவருடம் போலவே வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒரு கல்யாணமண்டபம் ஏற்பாடாகியிருக்கிறது. குறைந்தவசதிகளுடன் கூட்டமாக பொதுக்கூடத்தில் தங்கி இரவெல்லாம் பேசுவதுதான் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பியல்பாக இதற்குள் ஆகிவிட்டிருக்கிறது. இம்முறையும் அதுவே விழாவைப்பற்றி சென்றமுறையெல்லாம் வந்ததுபோன்ற வசைகள் வரவில்லையே , அது ஒருகுறையாகவே உள்ளதே என்ற ஆதங்கம் நண்பர்களுக்கெல்லாம் இருந்தது. அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42710

விஷ்ணுபுரம் விருதுவிழா- பாலா

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இயக்குநர் பாலா கலந்துகொள்கிறார். தமிழ்த்திரைப்பட வரலாற்றில் பாலாவின் இடம் மாற்றுக்கருத்தின்றி திரையுலகத்தவராலேயே அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. பாலாவின் சேது வெளிவந்தபோது அது உருவாக்கிய அதிர்ச்சியலைகளே அதை ஒரு வணிகவெற்றிப்படமாக ஆக்கின. ஒருபோதும் தமிழ் சினிமா பார்த்திராத ஓர் உலகைப் படமாக்கிக் காட்டியதுதான் அதை முக்கியமான படைப்பாக இன்றும் நிலைநிறுத்துகிறது. நம்முடைய ‘மனச்சமநிலைகொண்ட’ சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ‘மனநோயாளி’ களின் உலகத்தின் அதிரவைக்கும் ஓர் உலகு அதில் இருந்தது அது ஒரு குப்பைக்கூடை. நம் நாகரீகம் பயன்படுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42684