Tag Archive: விஷ்ணுபுரம் விருது விழா

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/128941

விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்

  விஷ்ணுபுரம் விருதுவிழா, மற்றும் அரங்குகள் தொடங்கும்போது ஒவ்வொரு முறையும் அதன் முறைமைகள் நெறிகள் குறித்து எழுதவேண்டியிருக்கிறது. இம்முறையும்   முறைமையும் நெறிகளும் இல்லாத அரங்கு என ஒன்று இல்லை, அப்படியொன்று உலகில் எங்கும் நிகழ்வதுமில்லை. ஆனால் தமிழகத்தில் முதிரா இலக்கியவாதிகள் நடுவே இலக்கியம் முறைமையும் நெறிகளும் இன்றியே நிகழமுடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அது நம் மதுக்கடை உளறல்களில் இருந்து உருவானது. கூடுதல்குடித்தவர் கூடுதலாக உளறுவது என்பதே அங்குள்ள நெறி.   தமிழகத்தில் அவ்வாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128551

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

அன்புள்ள ஜெ   அபி ஆவணப்படம் முன்னோட்டம் பார்த்தேன். நல்ல ஒளிப்பதிவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய இயல்பான நடையும் தயக்கமான பேச்சும் எழுத்தும் எல்லாம் அந்த முன்னோட்டத்திலேயே வெளிப்படுகிறது. அழகான ஆவணப்படமாக அமையும் என நினைக்கிறேன்.   கே.பி.வினோத் முன்னர் எடுத்த இரண்டு ஆவணப்படங்களுமே நேர்த்தியானவை. அவை ஞானக்கூத்தன், ராஜ்கௌதமன் ஆகிய இரண்டு ஆளுமைகளை தெளிவாகக் காட்டியவை. அவருக்கும் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கவிஞர் ராஜாசந்திரசேகர் அவர்களுக்கும் பாராட்டுக்கள். இசையும் மென்மையாகவும் அழகாகவும் இருந்தது. அபி கவிதைகளின் மனநிலைகளுடன் ஒத்துப்போவதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128316

விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்

    விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், பாடகர் ரவி சுப்ரமணியம் கலந்துகொள்கிறார்     ரவி சுப்ரமணியம் கவிஞராக தமிழில் அறிமுகமானவர். சீம்பாலில் அருந்திய நஞ்சு என்ற வலுவான படிமம் மூலம் கவனிக்கப்பட்டவர். இளமையில் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தமிழிசை மரபை நன்கறிந்தவர். சிறப்பாக பாடக்கூடியவர்   ஆனால் அவரது முதன்மைப்பங்களிப்பு காட்சி ஊடகத்தில். அவரது சாதனைகளாக நினைக்கப்படுபவை தமிழ் இலக்கிய முன்னோடிகளைப்பற்றி அவர் எடுத்த முக்கியமான ஆவணப்படங்கள் வழியாகத்தான். ஜெயகாந்தன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42702

விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்  

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உரையில் நான் தமிழகத்தின் பெருமிதமான கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் தம்பதியினருக்கு ஒரு வாழ்க்கைவரலாறு கூட தமிழில் இல்லை என்று சொல்லியிருந்தேன். அதை கேட்டவர்கள் இருபதாயிரம்பேருக்கு மேல். ஆனால் அந்த வரியிலிருந்து ஊக்கம் கொண்டு கிருஷ்ணம்மாளைச் சென்று கண்டு அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற, லாரா கோப்பா அவர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களைப்பற்றி எழுதிய நூலை தமிழில் அழகிய பதிப்பாக வெளிக்கொண்டுவர முன்வந்தவர்கள் குக்கூ – தன்னறம் அமைப்பினர். இலக்கியம் பேசப்படுவதற்கான ஓர் அமைப்பாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128090

விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு…

அன்பு நண்பர்களுக்கு, டிசம்பர் 27, 28 (வெள்ளி, சனி) அன்று நடைபெறும் விஷ்ணுபுரம் விழாவுக்கு அருகில் உள்ள  இருவேறு இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்தால்  மற்ற ஏற்பாடுகள் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.  தங்குமிடம் வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் வருபவர்களின் விபரங்களை குறித்து அனுப்ப வேண்டுகிறோம். விஷ்ணுபுர விழா தங்குமிடம் பதிவு ஜெ   தொடர்புக்கு:- விஜயசூரியன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127557

தாமிராபரணம்

[முன்னுரை] நம் அரசு சார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் மூத்த பெரும்படைப்பாளிகள் கௌரவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்ட நிலைக்கு எதிரான செயல்பாடாகத் தொடங்கப்பட்டது விஷ்ணுபுரம் விருது. இது எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் அளிக்கப்படுகிறது. அவருடைய புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரத்தின் பெயரால் அமைந்தது. 2010ல் ஆ மாதவனுக்கு முதல்விருது அளிக்கப்பட்டது. 2011ல் பூமணியும் 2102 ல் தேவதேவனும் 2013 ல் தெளிவத்தை ஜோசப்பும் 2014 ல் ஞானக்கூத்தனும் 2015ல் தேவதச்சனும் இவ்விருதைப் பெற்றனர். 2016 ஆம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93576

வருகையாளர்கள் 5, நாஸர்

  நடிகர் நாஸர் நான் பங்கேற்ற காவியத்தலைவனில் சங்கரதாஸ் சுவாமிகளின் சாயல்கொண்ட கதாபாத்திரமாக என் மனதில் நின்றிருப்பவர். நவீன நாடக இயக்கத்திலிருந்து சினிமாவுக்குச் சென்றவர். இன்று தெலுங்கு தமிழ் இருமொழிகளிலும் புகழ்மிக்க நடிகர். இலக்கியத்திலும் நாடகத்திலும் தொடர்ச்சியான ஈடுபாடுள்ளவர் நாஸர்.   நாஸர் விக்கிப்பீடியா அறிமுகம்   பிற அழைப்பாளர்கள் எச் எஸ் சிவப்பிரகாஷ் அறிமுகம் மதுரைக்காண்டம் எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம் எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள் எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 2 எச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93495

வருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்

மருத்துவர் கு சிவராமன் சித்தமருத்துவர். ஆனால் அம்மருத்துவமுறையை நவீன இயற்கை மருத்துவத்தின் கொள்கைகளுக்கு அணுக்கமாக ஆக்க முயல்பவர். இன்றைய வாழ்க்கையில் இருக்கும் உடல்நலச் சிக்கல்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைத் தொடர்கள் மூலம் பெரும்புகழ் பெற்றவர். உடல்நலம் என்பது ஒருங்கிணைந்த இயற்கைநோக்கு மூலம் அமைவது, மருந்துக்களால் அல்ல என்பதை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார் என்று சொல்லலாம் வண்ணதாசனின் அணுக்கமான வாசகர் என்றமுறையில் இவ்விழாவில் கு சிவராமன் பங்கெடுக்கிறார் கு சிவராமன் பேட்டி – தி ஹிந்து   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93489

வருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை

    பவா செல்லத்துரை எனக்கு சகஎழுத்தாளர் என்பதைவிட முப்பதாண்டுக்கால நண்பர் என்று சொல்வதே பொருத்தம். நான் 1987ல் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். இன்றுவரை நீடிக்கும் அணுக்கம் அவருடையது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணக்கமான முகமாக ஒரு காலகட்டத்தில் பவா அறியப்பட்டார். கட்சியின் துணையமைப்பாக, வெறும்பிரச்சாரக்குழுமமாக இருந்த அதை அனைத்து இலக்கியவாதிகளுடனும் தொடர்புள்ளதாகவும் அனைத்து இலக்கியவிவாதங்களிலும் பங்கெடுப்பதாகவும் மாற்ற அவரால் முடிந்தது. அவர் திருவண்ணாமலையில் நிகழ்த்திய கலையிலக்கிய இரவு என்னும் நிகழ்ச்சி பின்னர் தமிழகம் முழுக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93483

Older posts «