Tag Archive: விஷ்ணுபுரம் விருதுவிழா

விஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம்

அன்பு நண்பர்களுக்கு விஷ்ணுபுர விழாவன்றும் முந்தைய நாளும் நடக்கும் நிகழ்வுகள் வழக்கமான இடத்தில் இல்லாமல் இந்த வருடம் குஜராத்தி சமாஜில் நடக்க உள்ளது. டார்மிட்ரி போல தங்க இடம் கிடைக்கவில்லை.  அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்தால் ஏற்படுகள் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் வருபவர்களின் விபரங்களை குறித்து அனுப்ப வேண்டுகிறோம். விஷ்ணுபுர விழா தங்குமிடம் பதிவு ஜெயமோகன்   தொடர்புக்கு:- விஜயசூரியன் +91-99658 46999 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93241

ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்

ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம் கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை. ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார் அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68861

விழா கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, விஷ்ணுபுரம் விழா இனிதே நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். தொலை தூரத்தில் இருப்பதால் விழாவில் பங்கு கொள்ள இயலவில்லை. ஆனால் ஒரு விழாவில் கூட கலந்து கொள்ள முடிந்ததில்லையே என்ற எண்ணம் என்னுள் ஏப்போதும் இருக்கும். நேற்று என் தம்பி உங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டிருந்தான். அதிர்ச்சியாக, மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவனிடம் விழாவிற்கு போகும் படி சொல்ல கூட இல்லை. அவனும் போவதாய் என்னிடம் சொல்லவில்லை. ஃபேஸ்புக்கில் அழைப்பை பகிர்ந்ததோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68833

விஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு 2014ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கோவையில் டிசம்பர் 29 அன்று வழங்கப்பட்டது , விழா புகைப்படங்கள்.       Vishnupuram award 2014

Permanent link to this article: https://www.jeyamohan.in/68812

இன்று விஷ்ணுபுரம் விருதுவிழா

இன்று டிசம்பர் 22 அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நண்பர்கள் கோவையில் ஏற்கனவே கூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்தும் கூட நண்பர்கள் வந்திருக்கிறார்கள். விவாதங்கள் சிரிப்பு என ஓர் இலக்கியத்திருவிழா. சென்ற சில ஆண்டுகளில் இப்படி ஒரு நட்புவிழாவாக இதை ஆக்கமுடிந்ததே முதன்மையான சாதனை என நினைக்கிறேன் இன்று காலைமுதல் சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்கள். அனைவரிடமும் விவாதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன விழா அழைப்பிதழ் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42719

இன்று கோவை வருகிறேன்

நாளை [ டிசம்பர் 22 ] கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் இன்று [21-12-2013] காலை கோவைக்கு வருகிறேன். இருபத்தைந்தாண்டுக்காலமாக இலக்கிய உலகில் என் அனுபவம் உள்ளது. நினைவுகளில் இன்று தங்கியிருப்பவை படைப்பூக்கத்துடன் எழுதிக்கொண்டிருந்த நாட்களும் நண்பர்களுடன் விதவிதமான ஊர்களில் சந்தித்துப்பேசியவையும்தான் அதிலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. புதிய ஊர்களில் சந்திப்பதைவிட மீண்டும் மீண்டும் ஒரே ஊரில் சந்திப்பது உற்சாகமூட்டுகிறது. ஏனென்றால் முந்தைய சந்திப்பின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவில் ஒரு பின்புலமாக அமைகின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42797

விஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இந்திரா பார்த்தசாரதி கலந்துகொள்கிறார். தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகளில் ஒருவர் இ.பா நவீனத்தமிழிலக்கியம் உருவான நாள் முதல் அதற்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. அதன் முன்னோடிப்பெரும்படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவருமே கிராமங்களை, அல்லது சிறுநகரங்களைச் சார்ந்தவர்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்ற சிலர் முழுவாழ்க்கையையும் பெருநகரில் கழித்தவர்கள், ஆனால் பெருநகர் வாழ்க்கையை அவர்கள் எழுதவில்லை. பெருநகர்வாழ்க்கையைப்பற்றிய கிராமத்தானின் விலகலும் விமர்சனமுமே அவர்களின் படைப்புகளில் இருந்தது. இன்னொருபக்கம் பெருநகர் வாழ்க்கையை எழுதியவர் அசோகமித்திரன். ஆனால் அவரது உலகம் பெருநகரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42671

விழா மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ , விழா நிமித்தம் உங்களையும் நண்பர்களையும் சந்திக்க முடிந்தது மிக்க மகிழ்வளிக்கிறது.மகிழ்ச்சி என்பதைவிட இது மனதை நிறைக்கும் ஒரு அனுபவம் என்றே சொல்ல வேண்டும், ஒரு விதமான பூரிப்பு. எழுத்தாளர்களை நேரில் சந்திப்பது ஏமாற்றமாகவே முடியும் என்ற‌ பொதுவான அபிப்பிராயத்தைதைத் தகர்த்தது தங்களை சந்தித்த அனுபவம்.எனக்குத் தங்களைப் பற்றி மனதில் இருந்த பிம்பத்திற்கும் நேரில் கண்ட ஆளுமைக்கும் வித்தியாசமே இல்லை , நேற்று எழுத்தில் விட்டதை இன்று நேரில்தொடர்வது போல தான் இருந்தது . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33516

விஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,

இந்தமுறை விஷ்ணுபுரம் விருது தேவதேவனுக்கு என கடைசியில்தான் முடிவெடுத்தோம். தேவதேவனுக்கு விருது அளிப்பதென்பது என்பது எங்களுக்குப்பெரிய கௌரவம் என்றாலும் அவர் எங்கள் நண்பர் குழுமத்துக்கு மிகநெருக்கமானவர் என்பதனால் அந்தத் தயக்கம். ஏற்கனவே அவரது படைப்புகளைப்பற்றிக் கருத்தரங்கு நடத்தியிருக்கிறோம். அவர் எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு விருதளிப்பது சொந்த அண்ணனுக்கு விருதளிப்பதுபோல. ஆனாலும் தமிழில் கௌரவிக்கப்படாத பெரும்படைப்பாளிகளில் ஒருவர் அவர் என்பதனால் அவருக்கே அளிப்பதாக முடிவெடுத்தோம் பரிசை அளிப்பதற்கு இளையராஜாவை அணுகுவதற்கு தேவதேவன்தான் காரணம். நான் இருவரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33332

தினமணி செய்தி

மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள் இசையமைப்பாளர் இளையராஜா கோவை, டிச. 22: பாடலில் மனது ஒருமைப்படுவது போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கெüரவிக்கும் விதமாக, சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது. அவ்வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஆ.மாதவனுக்கும், 2011ஆம் ஆண்டு எழுத்தாளர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33368

Older posts «